
2019 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அதிமுக, திமுக தலைமையில் தமிழகத்தில் இரு பெரிய கூட்டணிகள் இந்த முறை அமைந்துள்ளது.
இந்தக்கூட்டணி போக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரன் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியனவும் தனியாக களமிறங்குகிறது.
பிற இதர கட்சிகளும் தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத மிகவும் முக்கியமான தேர்தலாக இது உள்ளது.
அரசியல் கட்சிகள் வெற்றியைப் பெற தீவிரம் காட்டுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களைக் கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களையும் அதிமுக கூட்டணி 5 இடங்களையும் கைப்பற்றும் என டைம்ஸ் நவ் – விஎம்ஆர் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ், திமுக கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 52.20 சதவித வாக்குகளையும், அதிமுக, பா.ஜனதா., பாமக, தேமுதிக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 37. 20 சதவித வாக்குகளையும், மற்ற கட்சிகள் 10.60 சதவித வாக்குகளை கைப்பற்றும் என கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


