சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

சி.பி.எஸ்.இ எனப்படும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் இவ்வாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய ஒன்றியம் முழுவதும் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்குகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025, பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி மார்ச் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 15 ஆம் தேதி ஆங்கிலம், 20 ஆம் தேதி அறிவியல், 27 ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடத் தேர்வுகள் நடைபெறும். மார்ச் 10 ஆம் தேதி கணிதம், 13 ஆம் தேதி ஹோம் சயின்ஸ் தேர்வுகள் நடைபெற உள்ளன.

இதேபோல், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி தொழிற்கல்விப் பாடத் தேர்வுகளுடன் தொடங்குகிறது. பிப்ரவரி 21 ஆம் தேதி இயற்பியல், 24 ஆம் தேதி புவியியல், 27 ஆம் தேதி வேதியியல் தேர்வுகள் நடைபெறுகிறது. ஏப்ரல் 4 ஆம் தேதி இறுதித் தேர்வாக உளவியல் தேர்வு நடைபெறுகிறது.

தேதி
——– பாடம்

15.02.2025 தொழில்முனைவு
17.02.2025 உடற்கல்வி
20.02.2025 கணினி பயன்பாடு
21.02.2025 இயற்பியல்
22.02.2025 தொழில் படிப்பு மற்றும் வணிக நிர்வாகம்
24.02.2025 புவியியல்
25.02.2025 பிரெஞ்சு
27.02.2025 வேதியியல்
04.03.2025 வங்கியியல்
05.03.2025 விவசாயம்
08.03.2025 கணிதம்
11.03.2025 ஆங்கிலம்
15.03.2025 இந்தி
19.03.2025 பொருளாதாரம்
22.03.2025 அரசியல் அறிவியல்
25.03.2025 உயிரியல்
26.03.2025 கணக்கியல்
29.03.2025 கணினி அறிவியல்
01.04.2025 வரலாறு
02.04.2025 தமிழ்
03.04.2025 வீட்டு அறிவியல்
04.04.2025 உளவியல்

பொதுத்தேர்வுகள் அனைத்தும் காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடைகிறது.

Leave a Response