இராகுல்காந்தி பற்றிய தவறான செய்திக்கு விளக்கம்.

காங்கிரசு தலைவர் இராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்குவங்க மாநிலத்தில் நுழைந்தது,அங்கு இராகுல் காந்தி பயணித்த மகிழுந்தின் மீது கல்வீசப்பட்டது.அவர் பயணித்த வண்டியின் மீதே கல் வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரின் பின்பக்க கண்ணாடி உடைந்த நிலையில், காயம் எதுவும் இன்றி இராகுல் காந்தி தப்பினார் என்று செய்திகள் வெளியாகின.

இந்தச் செய்தி இந்திய ஒன்றியம் முழுதும் பரவி பரபரப்பு ஏற்பட்டது, இந்நிலையில் இந்நிகழ்வு குறித்து காங்கிரசுக் கட்சி வெளியிட்டுள்ள பதிவில்….

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் இராகுல்காந்தியைச் சந்திக்க ஏராளமானோர் குவிந்தனர். இந்தக் கூட்டத்தில், ஒரு பெண் திடீரென இராகுல் காந்தியின் கார் முன் அவரை சந்திக்க வந்தார், இதனால் திடீரென பிரேக் போடப்பட்டது.

அப்போது பாதுகாப்பு வட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கயிற்றால் காரின் கண்ணாடி உடைந்தது.

மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக மக்கள் தலைவர் திரு இராகுல் காந்தி நீதி கேட்டுப் போராடி வருகிறார். பொதுமக்கள் அவருடன் உள்ளனர், பொதுமக்கள் அவருக்குப் பாதுகாப்பாக உள்ளனர்.

இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response