தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் விடிய விடிய மழை பொழிவு பதிவாகியுள்ள காரணத்தால் இன்று (திங்கட்கிழமை, ஜூன் 19) சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவித்துள்ளார் ஆட்சியர் அருணா. மழை காரணமாக இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை காரணமக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை காரணமாக செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு முதல் கனமழை பெய்வதன் காரணமாக விடுமுறை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரம் முழுவதும் பரவலாக மழை பொழிவு இருந்து வருகிறது.மயிலாப்பூர் ஆர்.கே.சாலை, ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளில் மரம் சாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல அடுத்த சில மணி நேரங்களில் மழை பொழிவு மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் புதுச்சேரியிலும் மழை பொழிவு பதிவாகி உள்ளது.
நேற்று முன் தினம் வரை கடும் வெயில், இன்று கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை எனும் நகைமுரணால் சென்னை மக்கள் திகைப்படைந்துள்ளனர்.