பிரதமர் மோடியைச் சீண்டினாரா விராட்கோலி? – பரபரக்கும் சமூக ஊடகம்

இந்திய மட்டைப்பந்து அணித்தலைவர், நட்சத்திர வீரர், அதிக இரசிகர்கள் பட்டாளம் கொண்டவர் என்கிற பெருமைகளுக்குச் சொந்தக்காரர் விராட் கோலி.

அவர் தனது 19 ஆவது வயதிலே அண்டர் 19 அணியை உலகக் கோப்பையில் தலைமை தாங்கி இருக்கிறார்.அதன் பிறகு விராட் கோலி சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றார்.

இதனால் விராட் கோலி படிப்பு குறித்து இரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. கல்லூரிப் படிப்பை முடிக்க விராட் கோலிக்கு நிச்சயம் வாய்ப்பு இருந்திருக்காது.

பள்ளிப்படிப்பையாவது சரியாக முடித்தாரா? என்று இரசிகர்கள் இடையே ஒரு சந்தேகம் இருந்துவந்தது.

இது விராட்கோலியின் காதுகளுக்கும் போனதால் விராட் கோலியின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் சான்றிதழ் வெளிவந்திருக்கிறது.

விராட் கோலி 2004 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள சேவியர் கான்வென்ட் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்திருக்கிறார்.

விராட் கோலி ஆங்கிலத்தில் 83 மதிப்பெண்கள் வாங்கி ஏ1 கிரேடு பெற்றுள்ளார். அதேபோன்று மொழிப்பாடமான இந்தியில் விராட் கோலி 75 மதிப்பெண்கள் பெற்று பி1 கிரேட் பெற்றுள்ளார். மிகவும் கடினமான கணிதப் பாடத்தில் விராட் கோலி 51 மதிப்பெண்கள் தான் பெற்று சி2 கிரேட் பெற்றுள்ளார்.

அறிவியல் தொழில்நுட்பப் பாடத்தில 32 மதிப்பெண்களும் செய்முறை தேர்வில் 23 என மொத்தம் 55 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

சோசியல் சயின்ஸ் பாடத்தில் விராட் கோலி 81 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக விராட் கோலி தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருக்கிறார்.

இந்தத் தகவல் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவிவருவது தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறியேறும் என்கிற முதுமொழிபோல் விராட்கோலியின் சான்றிதழ் வெளியான நேரத்தில்,

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து ஆர்.டி.ஐ மூலம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் கேட்டிருந்த விவகாரம் தொடர்பான வழக்கில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பும், அந்தத் தீர்ப்பில், மோடியின் பட்டப்படிப்பு தொடர்பான தகவல்களை வழங்குமாறு குஜராத் பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்ட மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு இரத்துசெய்யப்பட்டதோடு, தகவல் கேட்ட கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதமும் விதித்த சிக்கலும் வந்தது.

இதனால் பிரதமரைச் சீண்டும் விதமாகவே இவ்வளவு வருடங்கள் இல்லாமல் இப்போது விராட்கோலியின் சான்றிதழ் வெளியாகியுள்ளது என்று சொல்லி அவரை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Leave a Response