
பின்லாந்து நாட்டில் பிள்ளைகள் 7 வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர்; பள்ளியிலும் விளையாட்டு, இசை, ஓவியம் என்று பிள்ளைகளின் மனநிலைக்கேற்ற கல்வி , மன இறுக்கத்திற்கு இடம்இல்லை. பரீட்சை முறை, மதிப் பெண் முறை கிடையாது. இப்படிப் படிக்கும் மாணவர்கள் 95 விழுக்காடு உயர்கல்வி படித்து சாதனை படைத்து வரு கின்றனர்.
பின்லாந்தில் எல்கேஜி, யுகேஜி எல்லாம் கிடை யாது. 7 வயது வரை மகிழ்ச்சியாக வீட்டில் குழந்தைகள் விளையாட லாம். அதற்குப் பின்பு தான் பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள். அதனால் ஏழு வயது வரை குழந் தைகள் தாங்கள் கண்டதைக் கேட்டதை வைத்து அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள்.
அப்படியே பள்ளிக்குப் போனாலும் பாடப் புத்தகங்களை மட்டும் படித்து மனப்பாடம் செய்யப் பழக வேண்டியதில்லை. இசை, ஓவியம், விளையாட்டு என்று எதில் குழந்தை களுக்கு ஆர்வமோ அதையும் சேர்த்துப் படித்துக் கொள்ளலாம்.
தர வரிசை அடிப்படையில் முதலாவது, இருபதாவது என்று தர வரிசை எல்லாம் போட்டுமாணவர்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையை அங்கே விதைப்பதில்லை.
கூடப் படிப்பவனை போட்டியாக யாரும் நினைப்பதில்லை.
பள்ளியிலும் பாடங்களைப் படித்துவிட்டு, வீட்டுக்கு வந்தால் வீட்டுப் பாடம் என்று எப்போதும் மன இறுக்கத்தில் நம் ஊர் குழந்தைகள் இருப்பது போல பின்லாந்து நாட் டுக் குழந்தைகள் இருப் பதில்லை. ஏனெனில் அங்கே வீட்டுப் பாடமே தரப்படுவதில்லை.
படிக்கும் மாணவர் களுக்குத் தேர்வுகள் முக்கியமில்லை. தேர்வுக்காக இரவு, பகல் கண்விழித்துப் படித்து பாடங்களை வாந்தியெடுக்கும் முறை பின்லாந்தில் இல்லை.
கற்றுக் கொள்ளவே… அறிவை வளர்க்கவே மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள்.
பள்ளிப் படிப்பை முடித்த பின்லாந்து மாண வர்களில் 95 சதவீதம் பேர் உயர் கல்வி படிக்கிறார்கள்.
உலக அளவில் நடை பெறும் பல தேர்வுகளில் முதலிடம் பிடிப்பதும் பின்லாந்து மாணவர்கள் தாம். எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம், பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடங்களே இல்லை. எல்லாம் அரசுப் பள்ளிகள்தாம்.


