சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு – ஆயிரம் ரூபாயைத் தாண்டியதால் மக்கள் அதிர்ச்சி

சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை 965 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலையை இன்று மேலும் 50 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனால், வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளை விலை 2 ஆயிரத்து 508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வுகளால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Response