எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் வரும்போது மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வருவது உறுதி என்று உள்ளாட்சித்தேர்தல் பரப்புரையில் மேடைக்கு மேடை பேசிவருகிறார் தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி.

அவருடைய இந்தப் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பிவருகிறது.

சமுதாயச் செயற்பாட்டாளர் நாச்சியாள்சுகந்தி இதுகுறித்து எழுதியிருப்பதாவது…

எடப்பாடி பழனிச்சாமிக்கு,

பாஜகவின் ஆதரவை நம்பி ஓரே நாடு ஒரே தேர்தல்; சட்டமன்றம் முடக்கம் என்கிற தடித்தனமாகப் பேசுவது ஒட்டுமொத்த தமிழக நலனுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து.

உங்கள் சுயநலனுக்காக பாஜகவின் அஜெண்டாவுக்குள் செல்வது ஆபத்து என்பதை உணருங்கள்.

நீங்கள் மக்கள் செல்வாக்கைப் பெற்ற தலைமையும் இல்லை. போராளியும் இல்லை என்கிற உண்மை உங்களுக்கே தெரியும்.

மோடியா , லேடியா என்று சவால்விட்ட ஜெயலலிதாவுக்கு தீராத அவமானம் உங்கள் வார்த்தைகள். உயிரோடு இல்லாதவருக்கு எதற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் கடைக்கோடி அதிமுக தொண்டர் உங்களை எந்த நிமிடத்திலும் தூக்கி எறிவார். நினைவில் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response