முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சிறை உறுதி?

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் 6 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்கிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் 2 முக்கிய துறைகளாக கருதப்பட்ட மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. அமைச்சராக இருந்த 5 ஆண்டு காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக 4.85 கோடி ரூபாய் அளவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் இன்று காலை 6.30 மணியிலிருந்து தங்கமணியின் மகன் மற்றும் மனைவியின் இல்லங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. தங்கமணியின் உறவினர்கள் மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்கள் என 69 இடங்களில் தமிழகம் முழுவதும் சோதனை நடைபெற்று வருகிறது

தமிழ்நாடு மின்சாரத் துறை  முன்னாள் அமைச்சர் பி,தங்கமணி, தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மூலமும், 2016 முதல் 2020 வரையிலானபணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளது சம்மந்தமாக நேற்று நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் சுண்காணிப்பு பிரிவுகள்

13(2) r/w 13(1)(e) of the Prevention of Corruption Act 1988 and uls 13(2) thw 13(1)(b) of the Prevention of Corruption Act 1968 as amendod in 2018 -ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இந்த சட்டப்பிரிவுகளின் கீழ், அரசுப் பணியாளர் (அமைச்சர் உட்பட) என்ற முறையில் தன் நிரவாகத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்ட பொது சொத்தை எதனையும், நேர்மையற்ற முறையிலோ அல்லது மோசடியாகவோ கையாடல் செய்வாராயின், அல்லது பிறவாறு தனது சொந்த பயனுக்காக மாற்றிக் கொள்வாராயின், அல்லது பிறர் அவ்வாறு செய்ய அனுமதிப்பாராயின், ஒராண்டு முதல் ஏழாண்டு வரை சிறைத்தண்டனை விதித்துத் தண்டிக்கப்படுவார். 

Leave a Response