மாவீரர் நாளில் கேளிக்கை நிகழ்ச்சி நடத்துவதா? விஜய் தொலைக்காட்சிக்குக் கடும் எதிர்ப்பு

நவம்பர் 27 ஆம் நாளன்று விஜய் தொலைக்காட்சி சாஎபில், சிங்கப்பூரில்  நடக்கவிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி, வீரத்தமிழர்முன்னணியின் செயலாளர் செந்தில்நாதன்சேகுவேரா விஜய் தொலைக்காட்சிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடித விவரம்….

விஜய் தொலைகாட்சி நிர்வாகத்தினருக்கு வணக்கும். தாங்கள் தொலைக்காட்சி நடத்தும் நிகழ்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை வருகின்ற நவம்பர் 27 அன்று சிங்கப்பூரில் நடத்துவதாக அறியவருகிறோம். நவம்பர் 27 என்பது மாவீரர்கள் நினைவை கோரும்நாள் என்பதை நீங்களும் அறிவீர்கள் என்று நம்புகிறோம்.

விஜய் தொலைக்காட்சியை பொருத்தவரை ஒரு இனத்தின் அவலத்தைக் காட்சி பொருளாக்கி, அரங்கிலேயே சிலரை அழச்செய்து, அந்த வியாபாரத்தை அதிகமாக்கி கொள்வதில்திறமையானவர்கள். ஒருமுறை “நீயா நானா” நிகழ்ச்சியில்உச்சரிக்கப்பட்ட “பிரபாகரன்” என்ற பெயரை வெளிப்படையாக போதுவெளியிலே கத்தரித்தீர்கள். உலகத்தமிழர்களே உச்சரித்து உவகைகொள்ளும் பெயர் “பிரபாகரன்” என்ற பெயர் என்பதை நீங்கள் அறியாதவர்கள் இல்லை.

நீங்கள் நடத்துகின்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எப்படியாவது ஒரு ஈழக் குழந்தையை பாடச்செய்து, அவர்களையும் ஈழப்பாடலையே பாடச்செய்து அரங்கையே அழச்செய்து, அவர்கள் உன்னதமாக பாடினாலும் சரி,பொதுவெளி தேர்வுமுறையில் அவர்கள் அதிக மதிப்பெண் வாங்கினாலும் அவர்களுக்கு முதல் இடம் கிடைக்காமல்பார்த்துக்கொள்வீர்கள். “விடைகொடு எங்கள் நாடே” என்ற பாடலை பாடிய “சாயித்” மற்றும் கடந்த முறை முதல் இடத்தை தவறவிட்ட (இணைய வாக்குகள் அதிகம் பெற்றும்) ஈழக் குழந்தைக்கும் இப்படித்தான் நேர்ந்தது.

இவைகளை தாண்டி இனப்படுகொலை நிகழ்த்திய சிங்கள அரசு எப்போது அழைத்தாலும் விஜய் தொலைக்காட்சி இலங்கை சென்று இசைநிகழ்ச்சி நடத்துவது வாடிக்கையாக இருப்பதை உலகமே அறியும்.

இவற்றின் தொடர்ச்சியாக வருகின்ற மாவீரர்நாள் அன்று சிங்கப்பூரில் நீங்கள் நடத்த இருக்கும் ”சூப்பர் சிங்கர்” சிறப்பு நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் கட்டணமாக 40-80 சிங்கபூர் டாலர்கள். எதற்காக மாவீரர் தினத்தன்று இந்த நிகழ்ச்சி ?

மாவீரர்கள் யார் என்பதை விஜய் தொலைக்காட்சி அறியுமா ?அவர்களுக்காக கடைப்பிடிக்கப்படும் அந்த நாளின் மகத்துவம் நீங்கள் அறிவீர்களா ?

மாவீரர்கள்… “இறந்தவர்களுக்காக அழுதவர்கள் மத்தியில்,அழுதவர்களுக்காக இறந்தவர்கள்”, கையில் உள்ள ஆயுதம் பயன்தராத நேரத்தில் தனது உயிரையே ஆயுதமாக ஏந்தி இலக்கினை தகர்த்தவர்கள். இப்படிப்பட்ட விடுதலை நெருப்பினை நெஞ்சார நினைத்து அவர்களின் சாவின்மீது மீது சத்தியம் செய்து ஒவ்வொரு தமிழனும் இனவிடுதலை தீயினை தனது மனதில் பற்றவைத்து அடுத்த காலத்திற்கு தன்னை மனதளவில் தயார்படுத்திக் கொள்ளும் நாளே மாவீரர் நாள்.

அப்படிப்பட்ட திருநாளில் தமிழர்களின் விடுதலை உணர்வை மடைமாற்றி கேளிக்கை நிகழ்ச்சியில் கட்டிப்போட்டு, அவன் மனதில் உருவாகும் இனவுணர்வை நீர்த்துப் போகச்செய்யும் செயலாகவே நீங்கள் சிங்கப்பூரில் நடத்த இருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இந்த உலகத்தார் பார்க்கின்றனர். எனவே உலகெங்கிலும் பரவி வாழ்கின்ற தமிழ்தேசிய இனத்தின் இனஉணர்விற்கு மதிப்பளித்து, தாங்க நவம்பர் 27சிங்கப்பூரில் நடத்த இருக்கும் நிகழ்ச்சியை ரத்துசெய்ய வேண்டுகிறோம்.

சென்றவருடம் இதே போன்றதொரு சூழலில் அமெரிக்காவில் நடக்க இருந்த தனது நிகழ்ச்சியை தமிழ்தேசிய இனத்தின் உணர்விற்கு மதிப்பளித்து இசைஞானி இளையராசா அவர்கள் ரத்துசெய்தார் என்பதையும் இந்த நேரத்தில் உங்களுக்கு நினைவூட்ட விழைகிறோம்.

ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் இன உணர்விற்கு மதிப்பளித்து நவம்பர்27 அன்று சிங்கப்பூரில் நடக்க இருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ரத்துசெய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். எமது உணர்விற்கு மதிப்பளிக்காது நிகழ்ச்சியை நீங்கள் திட்டமிட்ட படி நடத்தினால் சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி

செந்தில்நாதன் சேகுவேரா
வீரத்தமிழர் முன்னணி

மாநிலச்செயளார்

மின்னஞ்சல் முகவரி : ntkvtm@gmail.com

Leave a Response