இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு பரவி வந்த கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்தது. அதன்படி வருகின்ற அக்டோபர் 17-ஆம் தேதி துவங்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரானது நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. அதில் 8 அணிகள் நேரடியாக பங்கேற்கும் என்றும் மீதம் உள்ள அணிகள் தகுதிச் சுற்று அடிப்படையில் பங்கேற்கும் என்றும் கூறப்பட்டது. இந்தத் தொடருக்கான அணி வீரர்களை ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற அணிகள் அறிவித்த நிலையில் மற்ற நாடுகள் அவர்களது அணிகளை அறிவிக்க வருகிற 10-ஆம் தேதி வரை ஐசிசி கெடு விதித்துள்ளது.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்றிரவு அறிவித்தது.
விராட் கோலி தலைமையிலான அந்த அணியில் அனுபவ வீரர்கள் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின் இடம் பெற்றுள்ளனர்.
டி20 உலககோப்பை கிரிக்கெட் இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ்.தோனி இருப்பார் என பிசிசிஐ துணை தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யாகுமார், இஷான் கிஷனுக்கும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
புவ்னேஷ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி அனுபவ வேகப்பந்து வீச்சாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆல் ரவுண்டர்களான ரவீந்தர ஜடேஹா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆலோசகராக மீண்டும் டி20 அணிக்குள் தோனி வந்திருப்பது அவருடைய இரசிகர்களுக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.