சென்னையில் பெட்ரோல் விலை 100.13 – நாசமாத்தாண்டா போவீங்க என மக்கள் சாபம்

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களிலும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை இலிட்டர் 100 ரூபாயைக் கடந்துள்ளது.

சென்னையில் கடந்த் மூன்று நாட்களாக பெட்ரோல் விலை இலிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 99.80 ரூபாய்க்கு, டீசல் விலை இலிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று மேலும் விலை உயர்ந்து சென்னையிலும் நூறு ரூபாயைத் தாண்டியது பெட்ரோல்விலை. செனனையில் இன்று ஒரு இலிட்டர் பெட்ரோல் விலை ரூ 100.13, ஒரு இலிட்டர் டீசல் விலை 93.72.

இவ்விலை உயர்வால் அதிர்ச்சியடைந்துள்ள நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள், நீங்கள் எல்லாம் நாசமாத்தாண்டா போவீங்க என்று சாபம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Leave a Response