மு.க.ஸ்டாலின் பயன்படுத்திய ஒற்றைச் சொல்லுக்குப் பின்னால் இவ்வளவு இருக்கா?

தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன் அதிகரித்து வழங்குக என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

கொரோனா பெருந்தொற்றை தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பான முதல்வர் மு.க.ஸ்டாலினின் டிவிட்டர் பதிவில்….

மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களிடம் தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொலைபேசி வாயிலாக விளக்கி ஒன்றிய அரசின் ஒத்துழைப்பைக் கோரினேன்.

தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தான கோரிக்கையைப் பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவெளில், இந்திய அரசு என்று குறிப்பிடாமல் ஒன்றிய அரசு என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பதுதான்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படியே அவர் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றாலும் மோடி தலைமையிலான அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு மாறாக இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை ஓழித்துக்கட்ட முயலும் நேரத்தில் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசு என்கிற பத்த்தைப் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது என்கிறார்கள்.

Leave a Response