
ஈழப்போரின் போது குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்டதில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் பங்கு உண்டு என்று சத்திய மூர்த்தி பவனில் கவர்ச்சி நடிகைகள் நக்மா குஷ்பு, இளங்கோவன் ஆகிய மூவரும் சேர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். இதற்கு நாம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
ராஜபக்சேவுடன் கூட்டு சேர்ந்து அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் தான் ஈழத்தில் தமிழ் மக்களைப் படுகொலை செய்யத் துணை போனது. இந்த உண்மையை மறைத்து தமிழ் மக்களிடையே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை கலங்கம் ஏற்படுத்த இளங்கோவன் கவர்ச்சி நடிகைகள் நக்மா குஷ்பு ஆகிய மூவரும் கூட்டாக சேர்ந்து பேட்டி கொடுத்து உள்ளனர். இதற்கு தமிழ் மக்களின் சார்பாக இவர்கள் மூவருக்கும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கும் வகையில் மூவரின் உருவபொம்மையை எரிப்போம் என்று தமிழர் முன்னேற்றப்படையினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி
நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 67 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட 38 படகுகளை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது.
தமிழர் முன்னேற்ற படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமி தலைமையில் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் குளக்கரை சாலையில் திரண்ட அவர்கள் இலங்கை அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.அதோடு, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், நடிகைகள் குஷ்பு, நக்மா ஆகியோரின் உருவபடங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர்.
இந்தப் போராட்டத்துக்கு தமிழர் முன்னேற்றப் படை நிறுவனதலைவர் வீரலட்சுமி தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.


