கேரள வனத்துறையில் ஒரு தமிழ்ப்பெண் சிங்கம், கடத்தல்காரர்கள் அச்சம்

கேரள மாநிலம், திருச்சூர் மத்திய வனவட்டம். 1,600 சதுர கி.மீ பரப்பளவுகொண்ட அடர்த்தியான வனப்பகுதி. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், ஆறுகளின் தோற்றப்புள்ளி என மாநிலத்துக்கு ‘கடவுள் தேச’ அந்தஸ்து கொடுப்பவை. இதையொட்டிய மலையாத்தூர் வனக்கோட்டம், ஆசிய யானைகளின் பிறப்பிடம். இங்கு சில மாதங்களுக்கு முன்னர் பிடிபட்ட யானை தந்தக் கடத்தல்காரர்கள், ‘ஒரே வருடத்தில் தந்தத்துக்காக 20 யானைகளைக் கொன்றோம்’ என வாக்குமூலம் கொடுத்தார்கள். 

இந்த விவகாரம், முக்கியக் குற்றவாளி ஈகிள் ராஜன் கைது வரை நீண்டது. அவருடைய டைரியில் தந்தங்களுக்கு ஆசைப்படும் இந்தியத் தொழிலதிபர்களின் பெயர்கள் நீள்கின்றன. தினம் தினம் யானை வேட்டைக் கொடூரம் தலைப்புச் செய்தியாக்கப்பட, கேரள எதிர்க்கட்சிகள் விவகாரத்தைக் கையில் எடுத்தன. தற்போது யானை வேட்டைக்கு சி.பி.ஐ விசாரணை கோரியிருக்கிறார் முதலமைச்சர் உம்மன் சாண்டி.

கேரளாவில் நடக்கும் இவ்வளவு விசயங்களுக்கும் காரணம், ஒரு  பெண் அதிகாரி… உமா.  இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், தமிழர் என்பது நமக்குப் பெருமை தரும் செய்தி. திருவனந்தபுரம் வன அதிகாரியான அவர்.  தூக்கம் இல்லாமல், இரண்டு நாட்கள் இவர் மேற்கொண்ட தொடர் சோதனையின் மூலம் யானை வேட்டைக் கும்பலின் ஆணிவேரையே அசைத்திருக்கிறார். கொலை மிரட்டல், பொய் வழக்குகள் என அந்தக்கூட்டம்,  இவரை அச்சுறுத்தினாலும், அசராமல் காட்டுக்குள் வலம்வருகிறார் உமா.
சொந்த ஊர் பட்டுக்கோட்டை பக்கத்துல ஒட்டங்காடு கிராமம். பி.எஸ்ஸி தோட்டக்கலை படிச்சேன். படிப்பில் எப்பவுமே ஃபர்ஸ்ட் ரேங்க்தான். பரம்பரையிலேயே நான்தான் முதல் தலைமுறைப் பட்டதாரி. 2009-ம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் ரேங்க். சின்ன வயசுல இருந்தே இயற்கை மேல காதல். ஏன்னா, இங்கே இயற்கை இல்லாமல் எதுவுமே கிடையாது. அதான் விரும்பி தேர்ந்தெடுத்து ஐ.எஃப்.எஸ் ஆனேன். 2013-ம் ஆண்டில் இருந்து திருவனந்தபுரம் டி.எஃப்.ஓ-வா வேலைபார்க்கிறேன். இந்த டிவிஷன்ல வேலைபார்க்கிற முதல் பெண் அதிகாரி நான்தான். ஒரு பெண் தன் துறையில் தன்னை நிரூபிக்க, ஆண்களைவிட இரண்டு மடங்கு கடுமையா உழைக்கவேண்டியிருக்கு. ஆனா, ‘நம்மால் முடியும்’னு உணர்த்திட்டா, ஆண்களைவிட அதிக மரியாதையோடு வேலைபார்க்கலாம்!”

 

 

 

Leave a Response