ரஜினியின் முடிவு – மாலன் புலம்பல்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்துவிட்டார். அவருடைய இந்த முடிவை பலரும் வரவேற்றுப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேசமயம், இந்துத்துவ ஆதரவாளர்களும் திமுக எதிர்ப்பாளர்களும் புலம்பித் தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

புலம்புவோர் வரிசையில் சேர்ந்திருக்கிறார் இதழாளர் மாலன் நாராயணன்.

அவர் வருத்தப்பட்டு வெளியிட்டிருக்கும் பதிவு….

ஹூம். …
2009. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர், கிஸ்ங்ஞரை சந்திக்க அமெரிக்கா சென்றிருந்தார் லீ. (அப்போது அவருக்கு வயது 86) அவருடன் அவரது மகளும் மருத்துவருமான வெய் லிங்க்கும் சென்றிருந்தார். அவர் தனது தந்தையின் நடையில் ஏதோ வித்தியாசமாக இருப்பதைக் கவனித்தார். நரம்பியல் வல்லுனரான அவர் உடனே சில எளிய பரிசோதனைகள் செய்தார். தன் தந்தையின் கால் நரம்புகள் பாதிக்கப்பட்டிருப்பது (Peripheral Neuropathy) தெரிந்தது. அவரிடம் அதிகம் நடக்க வேண்டாம், நெடு நேரம் நிற்பதைத் தவிருங்கள் என்று சொன்னர். நாடு திரும்பிய பின்னர் ஒரு விழாவில் கலந்து கொள்ள லீ சென்றார். அவரிடம் அவரது கால்கள் பற்றிக் கேட்டார்கள். “இதெல்லாம் என் மனதை, மன உறுதியைக் கொஞ்சம் கூடப் பாதிக்கவில்லை. சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு நாட்டிற்காக உழைத்தவர்கள் இருக்கிறார்கள். எனக்கு இன்னும் இரண்டு கால்கள் இருக்கின்றன. பின் எதற்குக் கவலை?” என்றார்.

(என் வீழ்வேன் என்று நினைத்தாயோ? நூலிலிருந்து)
ஹூம்….தமிழ்நாட்டிற்கு லீக்வான் யூக்கள் அருளப்படவில்லை

இவ்வாறு அவர் வருந்தியிருக்கிறார்.

Leave a Response