மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நிலை கொண்டு இருப்பதால் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும். பெரும்பாலான இடங்களில் இலேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புரெவி புயல் இலங்கை ஊடாக மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டது. இந்நிலையில், அந்தப் புயல் வலுவிழந்தது. இதனால் புயலின் தீவிரம் குறைந்த நிலையில், மழை தீவிரமாகப் பெய்தது. முத்துப் பேட்டையில் நேற்று அதிகபட்சமாக 100 மிமீ மழை பெய்தது.
மாமல்லபுரம், செங்கல்பட்டு 70மிமீ, குடவாசல், நன்னிலம், தலைஞாயிறு 60மிமீ, திருத்துறைப்பூண்டி, செய்யூர், கொள்ளிடம், சோழவரம், நாகப்பட்டினம், சிதம்பரம் 50மிமீ, சோழிங்கநல்லூர், செங்குன்றம், பேராவூரணி, தஞ்சாவூர், வேதாரண்யம், பூண்டி, பரங்கிப்பேட்டை, மன்னார்குடி, மதுக்கூர், திருத்தணி 40மிமீ மழை பெய்துள்ளது.
இந்நிலையில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி அதே இடத்தில் நிலை கொண்டு இருக்கிறது.
இதனால், இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் அனேக இடங்களில் இலேசானது முதல் மிதமாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த இரண்டு நாட்களுக்கு நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்ரு சொல்லப்பட்டிருக்கிறது.