2021 ஆம் ஆண்டுக்கான நீதிமன்ற விடுமுறை நாட்கள் அறிவிப்பு

2021 ஆம் ஆண்டுக்கான உயர்நீதிமன்றத்துக்கான விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 சனவரி 1- ஆங்கிலப்புத்தாண்டு
சனவரி 12,13,14,15 – பொங்கல் பண்டிகை
சனவரி 26 – குடியரசு தினம்

ஏப்ரல் 2 – புனித வெள்ளி
ஏப்ரல் 12,13- தெலுங்குப் புத்தாண்டு
ஏப்ரல் 14- தமிழ்ப் புத்தாண்டு
மே 1- தொழிலாளர் நாள்
மே 14 – ரம்ஜான்
சூலை 21 – பக்ரீத் பண்டிகை
ஆகஸ்ட் 15- சுதந்திரநாள்
ஆகஸ்ட் 20 – மொகரம்
ஆகஸ்ட் 30 – கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 10 – விநாயகர் சதுர்த்தி
அக்டோபர் 2 -காந்தி பிறந்தநாள்
அக்டோபர் 14,15-ஆயுதபூசை, விஜயதசமி
அக்டோபர் 19 – மிலாது நபி
நவம்பர் 3,4,5 – தீபாவளி
டிசம்பர் 25 -கிறித்து பிறப்பு
இவை தவிர எல்லா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை.

இவற்றோடு மே 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கோடை விடுமுறையும், அக்டோபர் 9-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தசரா பண்டிகை விடுமுறையும், டிசம்பர் 25-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையும் விடப்படுகிறது.

கீழமை நீதிமன்றங்களுக்கும் இந்த நாட்களில் விடுமுறை விடப்படுகிறது. அதேநேரம், ஜனவரி 23-ந்தேதி, மார்ச் 6-ந்தேதி, ஏப்ரல் 17-ந்தேதி, ஜூன் 5-ந்தேதி, ஜூலை 3-ந்தேதி, ஆகஸ்டு 7-ந்தேதி, செப்டம்பர் 4-ந்தேதி, அக்டோபர் 23-ந்தேதி, நவம்பர் 20-ந்தேதி, டிசம்பர் 4-ந்தேதி ஆகிய தேதிகளில் வரும் 10 சனிக்கிழமைகளில் அனைத்து கீழமை நீதிமன்றங்களும் செயல்படும். இதைதவிர அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், குடும்பநல நீதிமன்றங்கள் உள்பட அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை விடப்படுகின்றன.

Leave a Response