தமிழகமெங்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம் – வலுக்கட்டாயக் கைது

தமிழ்நாடு அரசு – வெளி மாநிலத்தவரை அழைக்கக் கூடாது, தமிழர்களுக்கு வேலை வழங்க தனி வாரியம் அமைக்க வேண்டும், இந்திய அரசு கொண்டு வந்துள்ள ஆரியத்துவ வர்ணாசிரமக் கல்விக் கொள்கையைக் கைவிட வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று (13.08.2020) தமிழ்நாடெங்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் “இனம் காக்க இருமுனைப் போராட்டம்” என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சிதம்பரம் மற்றும் பெண்ணாடத்தில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்…..

சிதம்பரம்

கடலூர் மாவட்டம் – சிதம்பரத்தில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன் உள்ளிட்ட தோழர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். போராட்டத்திற்கு, த.தே.பே. சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் இரா. எல்லாளன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை உள்ளதாகக் கூறிய காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோழர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்வதாக அறிவித்து, தாங்கள் கொண்டு வந்த வாகனங்களில் ஏற்றினர். தமிழக இளைஞர் முன்னணி தமிழக துணைப் பொதுச்செயலாளர் தோழர் ஆ. குபேரன், மூத்த உறுப்பினர்கள் பா. பிரபாகரன், மு. முருகவேள், ஆ. சிவஞானம், தமிழக உழவர் முன்னணி திரு. சி. ஆறுமுகம், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்ரமணிய சிவா, தோழர்கள் அ. கலைச்செல்வன், சோ. கார்த்திகேயன் உள்ளிட்ட தோழர்களைக் காவல்துறையினர் கைது செய்து வாண்டையார் மண்டபத்தில் அடைத்தனர்.

பெண்ணாடம்

கடலூர் மாவட்டம் – பெண்ணாடத்தில் பேருந்து நிலையம் அருகில் த.தே.பே. மூத்த தோழர் கு. மாசிலாமணி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.தே.பே. தலைமைச் செயற்குழு தோழர் க. முருகன், தமிழக மாணவர் முன்னணி தோழர் மணிமாறன், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி. பிரகாசு, மகளிர் ஆயம் தோழர்கள் க. இந்துமதி, மு. செந்தமிழ்ச்செல்வி, மு. தமிழ்மணி, குழந்தைகள் உட்பட 60 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பெண்ணாடம் சரோ ரத்தின மகாலில் அடைக்கப்பட்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் அண்ணா சாலை – ரத்னா திரையரங்கம் அருகில், த.தே.பே. புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி முன்னிலை வகித்தார். உலகத் தமிழ்க் கழகம் புதுச்சேரி அமைப்பாளர் திரு. கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி புதுச்சேரி செயலாளர் திரு. முத்.அம். சிவக்குமார், கைவினைஞர் வாழ்வுரிமைக் கட்சி பொதுச்செயலாளர் திரு. ஜெ. தனாளன், இலக்கியப் பொழில் இலக்கிய மன்றத் தலைவர் திரு. பெ. பராங்குசம், தமிழர் களம் புதுச்சேரி அமைப்பாளர் திரு. கோ. அழகர், நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்க செயலாளர் தோழர் த. இரமேசு, நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை செயலாளர் திருமதி. கௌரி, புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. புதுவைத் தமிழ்நெஞ்சன், புதுவை கோ. செல்வம், யாவரும் கேளிர் அறக்கட்டளை திரு. ஏ. கேசவன், தமிழின உணர்வாளர் திரு. வெ. கார்த்திகேயன், புதுச்சேரி மாணவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆ. உதயசங்கர், த.தே.பே. தோழர்கள் தே. சத்தியமூர்த்தி, அன்புநிலவன், பட்டாபிராமன், விசயகணபதி, செல்வி, மணிகண்டன், விசயரங்கன், அன்பழகன், முருகன், சண்முகம், முத்து மற்றும் நாம் தமிழர் கட்சி தோழர்கள், உணர்வாளர்கள் பங்கேற்றனர்.

தஞ்சை

தஞ்சையில் தொடர்வண்டி நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பே. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை தலைமை தாங்கினார். த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, மகளிர் ஆயம் தலைவர் ம. இலட்சுமி அம்மாள், துணைப் பொதுச்செயலாளர் க. செம்மலர், த.தே.பே. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி உள்ளிட்ட திரளான தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

திருச்சி

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் முன்பு த.தே.பே. மாநகரச் செயலாளர் தோழர் வே.க. இலக்குவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.பா. சின்னதுரை, சமூகநீதிப் பேரவை வழக்கறிஞர் இரவிக்குமார், அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கம் திரு. மகேசுவரன், சனநாயக சமூக நலக்கூட்டமைப்பு திரு. சம்சுதீன், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் குமார், மக்கள் உரிமை மீட்பு இயக்கம் திரு. பசீர், நாம் தமிழர் கட்சி திரு. கோபி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினலும், த.தே.பே. பொதுக்குழு தோழர்கள் மூ.த. கவித்துவன், பாவலர் நா. இராசாரகுநாதன், இனியன், வெள்ளம்மாள், திருவெறும்பூர் கிளைச் செயலாளர் தோழர் தியாகராசன், விராலிமலை கிளைச் செயலாளர் தோழர் இராமராசு உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.

சென்னை

சென்னை அசோக் பில்லர் மெட்ரோ தொடர்வண்டி நிறுத்தம் அருகில், த.தே.பே. பொதுக்குழு தோழர் பழ.நல். ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர் கவிபாஸ்கர், பொதுச் செயலாளர் பாவலர் முழுநிலவன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு தோழர்கள் வி. கோவேந்தன், வெற்றித்தமிழன், நடுவண் கிளைச் செயலாளர் தோழர் மு. வடிவேலன், திருவள்ளூர் கிளைச் செயலாளர் தோழர் செயப்பிரகாசு, தென்சென்னை கிளைச் செயலாளர் தோழர் இரமேசு, மகளிர் ஆயம் சென்னை ஒருங்கிணைப்பாளர் தோழர் பிருந்தா, செந்தாமரை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மதுரை

மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, த.தே.பே. மாநகரச் செயலாளர் தோழர் இரெ. இராசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், த.தே.பே. பொருளாளர் தோழர் ஆ. ஆனந்தன், பொதுக்குழு தோழர்கள் கதிர்நிலவன், சிவா, தோழர்கள் பே. மேரி (துணைத்தலைவர், மகளிர் ஆயம்), இளமதி (மதுரை மாவட்ட அமைப்பாளர, மகளிர் ஆயம்), வெ.ந. கணேசன் (மாவட்டச் செயலாளர், தமிழர் தேசிய முன்னணி), இராசுக்குமார் (பொதுச்செயலாளர், மருது மக்கள் இயக்கம்), வழக்கறிஞர்கள் சு. அருணாசலம், பகத்சிங், பாண்டியராசன், மூத்த தோழர் மு.கருப்பையா, அறிவழகன், தி. கருப்பையா, தங்கப்பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செங்கிப்பட்டி

தஞ்சை மாவட்டம் – செங்கிப்பட்டியில், சாணூரப்பட்டி முதன்மைச் சாலையில், த.தே.பே. பொதுக்குழு தோழர் இரெ. கருணாநிதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், த.தே.பே. ஒன்றியகுழு தோழர்கள் ஆ. தேவதாசு, ச. அருள்தாசு, செபஸ்தியார், பகத்சிங், செந்தமிழன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் திரு. மகி. சந்ரு, தமிழர் நலம் பேரியக்கம் தோழர் ஜெ. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

புதுக்குடி

தஞ்சை மாவட்டம் – பூதலூர் ஒன்றியம் புதுக்குடியில், தஞ்சை – புதுக்குடி முதன்மைச்சாலையில் த.தே.பே. பொதுக்குழு தோழர் க. காமராசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பேரியக்க தோழர்கள் கு. சுப்பிரமணியன், ரமேஷ், துரைராஜ், முருகேசன், சமத்துவபுரம் இன்பரசன், புதுக்குடி சேகர், தீபன், மற்றும் திருவிழாப்பட்டி கோவிந்தராஜ், மற்றும் மகளிர் ஆயத்தின் பகுதி முன்னனி செயல்பாட்டாளர் தோழர் சுந்தரி, கண்ணகி, மீனம்பாள், அஞ்சலை, இந்திராணி, ராணி மற்றும் மாணவர்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

குடந்தை

தஞ்சை மாவட்டம் – குடந்தையில் காந்தி பூங்கா அருகில், த.தே.பே. தலைமைச் செயற்குழு தோழர் க. விடுதலைச்சுடர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், த.தே.பே. பொதுக்குழு தோழர் தீந்தமிழன், மகளிர் ஆயம் செயற்குழு தோழர் மோ. இளவரசி, பேரியக்க தோழா்கள் ச. செழியன், இராசுகுமார், கோ. வளவன், சாமிமலை தோழர்கள் இர. சிவக்குமார், ம. சரவணன், தண்டபாணி, சிலம்பு சதீசு, சண்முகம், கோ. ஆகாசு, மணி, பா. விக்கி, க. சுசுன், பிரகதீஷ், திருவலஞ்சுழி தோழா்கள் ஜயா இராசேந்திரன், அபிசேக், பொய்யாமொழி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பேருந்து நிலையம் அருகில், தோழர் செ. அரவிந்தன் தலைமையிலும், கொள்ளிடம் ஒன்றியம் – பழையபாளையம் பகுதியில் தோழர் ராகேஷ் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சீர்காழி ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, தோழர் அரவிந்தனை காவல்துறையினர் அவரை சீர்காழி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

திருத்துறைப்பூண்டி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் காமராசர் சிலை அருகில், த.தே.பே. ஒன்றியச்செயலாளர் வழக்கறிஞர் இ. தனஞ்செயன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், த.தே.பே. தலைமைச் செயற்குழு தோழர் தை. செயபால், பொதுக்குழு தோழர் ப. சிவவடிவேலு, மாதவன் டெல்டா உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

கோவை

கோவையில் செஞ்சிலுவை சங்கம் அருகில், த.தே.பே. செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழர் முன்னணி பொதுச்செயலாளர் திரு. இமயம் சரவணன், இளைய தலைமுறைக்கட்சி திரு. கோபாலகிருஷ்ணன், த.தே.பே. தோழர்கள் இராசேசு, திருவள்ளுவன், தெள்ளியன், பெருஞ்சித்திரன், வெற்றியொளி, மாரியப்பன், பேச்சிமுத்து உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

புளியங்குடி

தென்காசி மாவட்டம் – புளியங்குடியில் காமராசர் சிலை அருகில் த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. பாண்டியன்

தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஐயாபுரம் ச. முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தார். திருவாளர்கள் இராயகிரி சொக்கையா பாண்டியன், புளியங்குடி பெரியசாமி, மாரிச்சாமி, மகளிர் ஆயம் உறுப்பினர் புளியங்குடி கல்பனா ஆகியோர் உள்பட முப்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் வட்டம் – குரும்பூரில் முதன்மைச்சாலையில் இன்று (ஆகத்து 13) மாலை, த.தே.பே. தலைமைச் செயற்குழு தோழர் மு. தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரூபஸ் முன்னிலை வகித்தார். த.தே.பே. தோழர்கள் விசயநாராயணப் பெருமாள், சிவக்குமார், உச்சிராஜ் மற்றும் நாம் தமிழர் கட்சி தோழர் ஞானசேகர் மற்றும் மகளிர் ஆயம் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

ஓசூர்

கிருட்டிணகிரி மாவட்டம் – ஓசூரில் இராம் நகரில் இன்று (ஆகத்து 13) மாலை, நகரச்செயலாளர் தோழர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் த.தே.பே. பொதுக்குழு தோழர் ப. செம்பரிதி, நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் திரு. ஜோக்கிம், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திரு. நடவரசன், நா.த.க. இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பாசறை தோழர் இரசினிகாந்த் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர். நிறைவில், தலைமைச் செயற்குழு தோழர் கோ. மாரிமுத்து இருமுனை போராட்ட விளக்க உரையாற்றினார். தோழர் முருகப்பெருமாள் கண்டன முழக்கம் எழுப்பினர். தோழர் துரைராசு நன்றி கூறினார்.

மேலமைக்கேல்பட்டி

அரியலூர் மாவட்டம் – மேலமைக்கேல்பட்டி மாரியம்மன் கோயில் அருகில் த.தே.பே. செயல்பாட்டாளர் தோழர் சி. சூர்யா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் இரவி, மணிகண்டன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

ஈரோடு

ஈரோட்டில், த.தே.பே. மாநகரச் செயலாளர் தோழர் வெ. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தோழர்கள் சரவணன், மாவீரன், குமரேசன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்று, கோரிக்கைப் பதாகைகளுடன் முழக்கமிட்டனர்.

தருமபுரி உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் அனுமதி கோரியிருந்த நிலையில், காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். சிதம்பரம் – பெண்ணாடம் பகுதிகளில் கைது செய்யப்பட்ட தோழர்கள் மாலை விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response