ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக தமிழ்க் கலை இலக்கியப் பேரவை அறிக்கை

வடஇந்தியக் கலையுலகம் ஏ.ஆர். இரகுமானை புறக்கணித்தால் தமிழ்த்திரையுலகம் வடஇந்தியக் கலைஞர்களை புறக்கணிக்கும் என்று இசைப்புயல் ஏ.ஆர்.இரகுமானுக்கு ஆதரவாக தமிழ்க்கலை இலக்கியப் பேரவை தலைவர்
கவிஞர் கவிபாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…..

“எனக்கு இந்திப் பட வாய்ப்பு வரமால் போனதற்குக் காரணம் தெரிந்துவிட்டது. எனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு குழு இயங்குகிறது. எனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு கும்பல் வதந்தி பரப்புகிறது” என்று ஏ.ஆர். இரகுமான் ஊடகத்திற்கு அளித்த ஒரு செவ்வியில் தெரிவித்துள்ளார்.

“இந்திய – ஆரியம் எப்போதும் தமிழர்களுக்கு எதிரானது; பகையானது” என்று நாம் தொடர்ந்து சொல்லி வருவது இப்போது, இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானுக்கு நடந்துவிட்டது.

இசைக்கென்று உலக அளவில் ஆஸ்கர் விருதை வென்ற ஒரு இசைக் கலைஞரை, தமிழரை இந்தித் திரையுலகம் எப்படிப் பார்க்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இந்தப் புவிப்பந்தில் இசை எல்லை கடந்தது. எங்கள் இசைப்புயலில் இசை, வட இந்தியாவில் மட்டும் சுழலுவதற்கானது இல்லை. அது உலகம் கடந்து ஈர்த்தவை; ஈர்ப்பவை!

இனியாவது, தமிழ்த்திரையுலகம் வடஇந்தியக் கலையுலகத்தைப் புரிந்து கொள்ளட்டும்! வட இந்தியக் கலையுலகம் ஏ.ஆர். இரகுமானைப் புறக்கணித்தால் தமிழ்த்திரையுலகம் வட இந்தியக் கலைஞர்களைப் புறக்கணிக்கும் என்று எச்சரிக்கை செய்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response