எடப்பாடி பழனிச்சாமி மு.க.ஸ்டாலினுக்கு பழ.நெடுமாறன் பாராட்டு

சமூகநீதியை நிலைநாட்டிய உயர்நீதிமன்றம் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

மருத்துவ மேற்படிப்புகளில் மத்திய அரசின் தொகுப்புக்கு தமிழக அரசு ஒப்படைத்த 50% இடங்களில் தமிழக அரசு பின்பற்றும் இடஒதுக்கீடு முறையை வழங்குவதற்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

இந்த ஆணையை மதித்துப் பின்பற்ற மத்திய அரசு எவ்விதத் தயக்கமுமின்றி முன்வரவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

உயர்நீதிமன்றத்தில் இதற்கான வழக்கினைத் தொடுத்து சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு முன்வந்த தமிழக முதல்வரையும் மற்றும் கட்சித் தலைவர்களையும் உளமாரப் பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response