கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க கையூட்டு?

சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கக் காரணமாக கோயம்பேடு சந்தை அமைந்துள்ளது என்று சொல்லி,மே முதல் வாரத்தில் கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் தற்காலிக சந்தை செயல்பட்டு வருகிறது.

100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருமழிசை காய்கறி சந்தையில் 10 அடி இடைவெளியில் 194 காய்கறிக் கடைகள் அமைக்கப்பட்டு ஒரு கடைக்கு 200 சதுர அடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒன்றரை மாதங்களுக்கு மேலாக அங்கு சந்தை செயல்பட்டு வரும் நிலையில்,மழைக்காலத்துக்கு முன்பு கோயம்பேடு சந்தையைச் சரிசெய்து, திருமழிசையில் இருந்து மீண்டும் கோயம்பேட்டுக்கே மாற்ற வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இச்சந்தை மாற்றம் குறித்து உலவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.

ஆம், மீண்டும் சந்தையை கோயம்பேட்டுக்கு மாற்ற வேண்டுமானால் கோயம்பேடு வியாபாரிகள் அனைவரும் சேர்ந்து 25 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும் என்று கேட்கப்படுகிறதாம்.

யார் கேட்டது? யாருக்காகக் கேட்டார்கள்? யார் சொல்லிக் கேட்கிறார்கள்? என்கிற விவரம் ஏதுமின்றி வியாபாரிகள் மத்தியில் இரக்சியமாக இத்தகவல் உலவிக்கொண்டிருக்கிறது.

Leave a Response