கொரோனாவிலும் கொள்ளை இலாபம் – மோடிக்கு ராகுல்காந்தி கோரிக்கை

கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை விரைவாகக் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் சில நிறுவனங்கள் 150 சதவீத இலாபத்தில் விற்பனை செய்துள்ளன என்று ஊடகங்களிலும் நாளேடுகளிலும் செய்தி வெளியானது. ரூ.225 மதிப்புள்ள இந்த ரேபிட் டெஸ்ட் கருவி ரூ.600க்கு விற்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கொரோனா வைரஸ் பெருந்தொற்று பேரிடருக்கு எதிராக தேசமே போராடி வருகிறது. ஆனால், இன்னும் சிலர் இந்த நேரத்தில் கூட இலாபம் சம்பாதிக்கிறார்கள்.

இதுபோன்ற ஊழல் மிக்கவர்களின் மனநிலையைப் பார்த்து வெட்கப்படுகிறேன். சிலர் 150 சதவீத இலாபத்தில் கருவிகளை விற்றுள்ளனர். பிரதமர் மோடி இதில் தலையிட்டு கொள்ளை இலாபம் சம்பாதித்தவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற செயலை தேசம் ஒருபோதும் பொறுக்காது

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response