அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் இத்தாலியில் உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் நாடுமுழுவதும் கொரோனா நோயிலிருந்து 1,590 பேர் குணமடைந்தனர். கடந்த காலங்களில் இல்லாத நல்ல முன்னேற்றமாகும்.
இதுநாள்வரை சராசரியாக நாள்தோறும் 812 பேர் உயிரிழந்து வந்த நிலையில், நேற்று உயிரிழப்பு குறைந்து 756 ஆகப் பதிவானது என்று மக்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தள்ளது.
மக்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஏஞ்சலோ போரேலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது….
இத்தாலியில் இதுநாள் வரை நாள்தோறும் 812 பேர் சராசரியாக உயிரிழந்த நிலையில் முதல் முறையாக உயிரிழப்பு குறைந்து 756 ஆக நேற்றுப்பதிவானது. 1,648 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 981 பேர் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். 27 ஆயிரத்து 795 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டு அது உறுதியான 43 ஆயிரத்து 752 பேர் அதாவது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மொத்த எண்ணிக்கையில் 58 சதவீதம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இலேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுகின்றன.
இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் இத்தாலியில் மெல்ல கொரோனா வைரஸின் பிடியிலிருந்து மீண்டு வருகிறது, 1,590 பேர் கடந்த 24 மணிநேரத்தில் குணமடைந்துள்ளனர், இதன் மூலம் 14 ஆயிரத்து 620 பேர் குணமடைந்துள்ளனர்.இத்தாலியில் கொரோனா வைரஸால் குணமடைந்தவர்களில் அதிகபட்சம் இதுவாகும்.
இத்தாலியில் இதுவரை அதிகமாகப் பாதிக்கப்பட்டது லோம்பார்டி மண்டலமாகும் அங்கு, இன்னும் 25 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீளவில்லை, எமிலியா ரோமாக்னா மண்டலத்தில் 10,766 பேர், வெனிடோவில் 7,564 பேர், பிட்மோன்ட்டில் 7,655 பேர் கொரோனாவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேசமயம், லம்பார்டி மண்டலத்தில் புதிதாக கொரோனா வைரஸால் பாதி்க்கப்படுவோர் எண்ணிக்கை நாள்தோறும் குறைந்து வருகிறது. கடந்த சிலநாட்கள் வரை 1,592 பேர் சராசரியாக பாதி்க்கப்பட்ட நிலையில் நேற்று 1,154 ஆகச் சரிந்துள்ளது. இருப்பினும் லோம்பார்டி மண்டலத்தில் உயிரிழப்பு 6,818 ஆக இருக்கிறு, நேற்று மட்டும் 458 பேர் உயிரிழந்தனர்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்கும் பணியில் இருந்த மருத்துவர்களும் இதில் இறந்துள்ளனர் நேற்று 11 மருந்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியான மருத்துவர்கள் எண்ணக்கை 63ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர 8,358 சுகாதாரப் பணியாளர்கள், அதாவது மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு ஏஞ்சலோ தெரிவித்தார்