முகநூல் பயன்பாட்டாளர்களுக்கு ஆபத்து, வருகிறது புதியசட்டம்

‘சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் அவதுாறு தகவல்களை கட்டுப்படுத்த, மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்’ என, உச்சநீதிமன்றம்
உத்தரவிட்டு உள்ளது.


நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோர் அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ முன், மூத்த வழக்கறிஞர், எல்.நாகேஸ்வர ராவ் தொடர்ந்த வழக்கில், ‘சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்களை கட்டுப்படுத்த சட்டம் வேண்டும்’ என, கோரினார்.

விசாரணையின் போது, ”சமீபத்தில், என்னைப் பற்றி அவதுாறான செய்தி, ‘வாட்ஸ் ஆப்’ வலைதளத்தில் உலா வந்தது. என் மீது கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக அந்த தகவல்தெரிவித்தது,” என்றார்.அதுபோல, மற்றொரு மூத்த வழக்கறிஞர், கே.பராசரனும் கூறினார்.

அதையடுத்து, ‘பெஞ்ச்’ அளித்த உத்தரவில் கூறியதாவது:தகவல் தொழில்நுட்ப சட்டத்தின், 66 – ஏ பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதாக, கோர்ட்டுக்கு ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து, அந்த பிரிவை ரத்து செய்தோம். ஏனெனில், அந்த சட்டப்பிரிவு சரிவர வரையப்பட வில்லை. ஆனால், புதிதாக சட்டம் இயற்ற தடை விதிக்கவில்லை. எனவே, சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த, மத்திய அரசு விரைவில் சட்டம் இயற்ற வேண்டும்.இவ்வாறு, பெஞ்ச் உத்தரவிட்டது.

Leave a Response