பெங்களூருவில் இந்திய அணி படுதோல்வி

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா மட்டைப்பந்து அணி, இந்தியாவிற்கு எதிராக டி20,ஒருநாள் மற்றும் ஐந்துநாள் போட்டித் தொடர்களில் விளையாடுகிறது.

முதல் டி20 போட்டியானது மழையால் இரத்தானது. இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்று ( செப்டம்பர் 22) 3 ஆவது டி20 போட்டி பெங்களூரில் நடந்தது.

இதில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில்…

தவான் 36, ரோகித் சர்மா 9, விராத்கோலி 9,ரிஷப் பண்ட் 19,ஸ்ரேயாஸ் அய்யர் 5,ஹர்திக் பாண்டியா 14,ரவீந்திர ஜடேஜா 19,வாஷிங்டன் சுந்தர் 4 ரன் மட்டுமே எடுத்தனர்.

இதனால் 20 ஓவர்களில் இந்தியா அணியால் 134 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

135 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்ரிக்கா அணிக்கு அந்த அணியின் தலைவரும் துவக்க வீரருமான டி காக் அதிரடி ஆட்டத்தை விளையாடினார். இறுதியில் தென் ஆப்ரிக்கா அணி 16.5 ஓவர்களில் 140 ரன்களை குவித்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி காக் அவுட் ஆகாமல் 79 ரன்கள் குவித்தார்.

இந்த வெற்றியின் மூலம் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

Leave a Response