புதிய கல்விக் கொள்கை – விஜய் அஜித் ரசிகர்கள் – தலையிலடித்துக் கொள்ளும் தமிழகம்

மோடி அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றதும், கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக் குழு, 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக்கொள்கை முன்வரைவு எனும் ஆவணத்தின் அடிப்படையில், தனது முழுமையான அறிக்கையை மே 31 ஆம் தேதி சமர்ப்பித்துள்ளது.

புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவை வெளியிட்டிருக்கும் அரசு, இதுகுறித்து மக்கள் கருத்து கூறலாம் என்று சொல்லிவிட்டு மக்களுக்கே தெரியாமல் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி வருகிறது.

இப்புதிய கல்விக்கொள்கைக்கு இந்தியா முழுக்க கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்திலுள்ள சமூக ஆர்வலர்கள் இன்று,

தேசியக்கல்விக் கொள்கை,கல்வியை கவலைக்குரியதாக்கும் என்பதால்,கல்வியை மாநிலப் பட்டியலில் சேர் தேசிய கல்விக்கொள்கையை கைவிடு என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி

என்னுடைய அடுத்த தலைமுறை வளமுடன் கல்வி கற்க
தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றேன் என்று சொல்லி இணையப் பரப்புரை செய்கிறோம் அதில் நீங்களும் கலந்துகொள்ளுங்கள், இன்று முழுவதும்
03/08/19 சனிக்கிழமை இணையப்போரை ஒவ்வொருவரும் முன்னெடுப்போம்.அனைவரும் தயாராகுங்கள்
ஒருநாள் மட்டும் ஒதுக்குவோம்

என்று அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

அதனடிப்படையில்….

#BringEducationToStateList
#rejectNEP

ஆகிய குறியீட்டுச் சொற்களை வைத்து சமூக வலைதளங்களில் பரப்புரை செய்து வருகிறார்கள்.

இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் வழக்கம்போல விஜய் ரசிகர்கள் மண்ணின் மைந்தன் விஜய் என்கிற குறியீட்டுச் சொல்லையும் 27yearsofதலஅஜித்குமார் என்கிற குறியீட்டுச் சொல்லையும் பரப்பி வருகிறார்கள்.

இதனால் எதிர்காலத்தலைமுறையையே பாதிக்கும் விசயம் குறித்த விவாதம் நடக்கும் நேரத்தில், அதைக் கண்டுகொள்ளாமல் இளைஞர்கள் இப்படிச் செய்கிறார்களே என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

Leave a Response