
சீமானின தேர்தல் பரப்புரை குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், 25-03-2019 முதல் 16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.
ஐந்தாம் நாளான நேற்று 29-03-2019 வெள்ளிக்கிழமை மாலை 05 மணியளவில், ஆரணி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அ.தமிழரசி அவர்களை ஆதரித்து ஆரணி (எம்.சி. திரையரங்கம் எதிரில்) பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் இரமேஷ் பாபு அவர்களை ஆதரித்து திருவண்ணாமலை (அண்ணா சிலை அருகில்), தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
இன்றைய தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – ஆறாம் நாள் (29-03-2019) | நாம் தமிழர் கட்சி
இன்று 30-03-2019 சனிக்கிழமை மாலை 05 மணியளவில், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பிரகலதா அவர்களை ஆதரித்து திண்டிவனம் (காந்தி சிலை எதிரில்) பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சர்புதின் அவர்களை ஆதரித்து கள்ளக்குறிச்சி (நகராட்சி திடல், மந்தைவெளி மேடை), தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.
புதியதொரு தேசம் செய்வோம்!
புரட்சியால் அதை உறுதி செய்வோம்!
நமது சின்னம் “விவசாயி”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சீமானுக்கு செல்லுமிடமெல்லாம் அமோக வரவேற்பு இருக்கிறதாம்.


