கொலையுதிர் காலம்’ பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த சர்ச்சை தொடர்பாக விக்னேஷ் சிவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவரையும் குறிப்பிட்டு ராதாரவி மீது நடவடிக்கை எடுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
ராதாரவி பேச்சு பெரும் சர்ச்சையானதால், இது வரவுள்ள மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கக் கூடாது என்று திமுக நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்து அவர் தற்காலிகமாக தி.மு.க. விலிருந்து நீக்கி வைப்படுகிறார்.
இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.
திமுகவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.