வழக்கு இருப்பதால் அமைதி, சுயரூபம் காட்டும் அமித்ஷா

 

 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் இருந்து பாஜக பின்வாங்கவில்லை என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக குஜராத் மாநிலம், சூரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமர் கோயில் விவகாரம், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவு ஆகிய விவகாரங்களில் இருந்து பாஜக பின்வாங்கி விட்டதாக கூறப்படுவதை மறுக்கிறேன்.
ராமர் கோயில் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்ட பிறகு, அதை பாஜக பின்பற்றும்.
அதேபோல், இந்த விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினால் தீர்வு காண முடியும் எனவும் பாஜக நம்புகிறது. இந்த 2 வழிமுறைகளும் பாஜகவிடம் உள்ளன என்றார் அமித் ஷா.
இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ், “2019ஆம் ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும்’ என்றார்.

 

Leave a Response