அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பட முன்னோட்டமும் அது படைத்த சாதனையும்

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 2019 ஏப்ரல் 26ம் தேதி வெளியாக உள்ள ‘அவெஞ்சர்ஸ் என்ட்கேம்’ படத்தின் முன்னோட்டம் யு டியூபில் வெளியிடப்பட்டது.

வெளியான 24 மணி நேரத்தில் 4 கோடி பார்வைகளையும், 20 லட்சம் விருப்பங்களையும் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் 24 மணி நேரத்தில், ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படத்தின் முன்னோட்டம் 2 கோடியே 30 லட்சம் பார்வைகளைப் பெற்றதுதான் சாதனையாக இருந்தது.

அந்தச்சாதனையை ‘அவெஞ்சர்ஸ் என்ட்கேம்’ முறியடித்துள்ளது. தற்போது இந்த முன்னோட்டம் 4 கோடியே 8 லட்சம் பார்வைகளையும் 24 லட்சம் விருப்பங்களையும் பெற்றிருக்கிறது.

யு டியூபில் முதலிடத்தில் உள்ள முன்னோட்டமாக ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ தான் உள்ளது. அந்த 21 கோடியே 56 லட்சம் பார்வைகளும், 34 லட்சம் லவிருப்பங்களும் இதுவரை கிடைத்துள்ளன. அந்த சாதனையை ‘அவெஞ்சர்ஸ் என்ட்கேம்’ முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

‘அவெஞ்சர்ஸ் என்ட்கேம்’ டிரைலர் தமிழிலும் யு டியுபில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் இணைப்பு இங்கே…..

Leave a Response