
தி.மு.க. தலைவர் கலைஞர் மு.கருணாநிதி உடல் நலக் குறைவு மற்றும் வயது முதிர்வால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை 6.10 மணியளவில் காலமானார்.
அவரது உடல், முழு அரசு மரியாதையுடன் அறிஞர் அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.
திமுகவின் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி மறைவை அடுத்து அந்தப் பதவிக்குப் புதியவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.
தி.மு.க.வின் தலைவர் மற்றும் பொருளாளர் தேர்தல் ஆகஸ்டு 28 ஆம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்து உள்ளார்.
இதற்கான வேட்பு மனுக்கள் வருகிற 26 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அப்பதவிகள் யார் யாருக்கு என்று முடிவாகிவட்டதாம்.
அதன்படி தலைவராக மு.க.ஸ்டாலினிம் பொருளாளராக துரைமுருகனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
ஆகஸ்ட் 26 அன்று மாலை இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
துரைமுருகனிடம் இருந்த முதன்மைச் செயலாளர் பதவி டி.ஆர்.பாலுவுக்குக் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.


