மக்களவையில் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் வெள்ளிக்கிழமை கொண்டு வந்தன. சுமார் 12 மணி நேர விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியில் அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள் கிடைத்தன.
அரசுக்கு எதிராக 126 வாக்குகள் மட்டுமே கிடைத்த தால் தீர்மானம் தோல்வி அடைந்தது.
இதில் பாஜக அரசு வெற்றி பெற்ற போதிலும் தமிழக மக்கள் மனங்களை வெல்ல முடியவில்லை.
சமூகவலைதளங்களில் மோடியை விமர்சித்தும் ராகுல்காந்தியைப் பாராட்டியும் எழுதுகின்றனர்.
அவற்றில் ஒரு பதிவு….
நடிகர் வடிவேலு பட நகைச்சுவை போல நடக்கும் பேச்சுவார்த்தை. அடி வாங்கியவர் மோடி, அடித்தவர் ராகுல் என்று வைத்து படிக்கவும்…
“ஏன் மாமா அடி ரொம்ப பலமா விழுந்துதோ?”
“அத ஏண்டா கேக்குற, முதல்ல பதினஞ்சு லட்சம் எங்கடான்னு ஆரம்பிச்சான்…
நான் சிரிக்கிற மாதிரி ராஜ்நாத் சிங்கை பார்த்தேன்…
அவரு மூஞ்சிய திருப்பிக்கிட்டாரு,
பின்னாடி ஸ்மிரிதி இருந்தா சகுனமே சரியில்ல….
சரி பொடிப்பய என்னத்த பேசிடுவான்னு நிமுந்து உக்காந்தேன்…
உடனே ஆண்டுக்கு ரெண்டு கோடி வேலை வாய்ப்பு என்னாச்சு?ன்னு கேக்குறான்.
நாங் குனிஞ்ச தல நிமிரவே இல்லியே..,
தல குனிஞ்சு உக்காந்தா நாடே காரி துப்புமேன்னு, கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி,…
சரிடான்னு நிமிந்து பாக்ககுறேன்,…
டபக்குன்னு சீனாங்குறான், டோக்லம்ங்குறான், அஜெண்டாவே இல்லைங்குறான்….
நமக்கு இங்கிலீஷ் வேற வராதா அப்புடியே ஆடிப் போயிட்டேன்….
சரித்தான்…
இத்தோட விட்டுடுவான்னு பாத்தா,… படக்குன்னு நிம்மிய பாத்து ரபேல்ங்கிறான்,…
1600 கோடிங்கிறான்,
ஊறுகாய் மாமியையும் என்னையும் சும்மா சேத்து வச்சு கிளிகிளின்னு கிளிச்சுட்டான்.
நானும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?
சரிடா, இதோட போதுண்டான்னு பாத்தா, வண்டி வண்டியா நாக்கை புடுங்கிக் கிட்டு சாகுற மாதிரி சொல்லிட்டான்
மாமு….
நீ காவலாளி இல்ல, கொள்ளக்காரனோட பார்ட்னர் ன்னு சொல்லிட்டான் …,
நான் அப்புடியே ஷாக்ஆயிட்டேன்.
நம்ம பொழப்பையே நாறடிச்சுடுவான்டா… பழைய பப்பு இல்லடா, திரும்பி அடிக்கிறாண்டா…
சரி எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு, நான் கொஞ்சம் சுதாகரிக்கிறதுக்குள்ள பக்கத்துல வந்து”
“பக்கத்துல வந்து!!!!!”
“என்னை கட்டிப் பிடிச்சு”
“கட்டிப்பிடிச்சு”
“நீ ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டு சீட்ல போய் உட்கார்ந்து கண்ணடிக்கிறான்”
ஒரு பத்து நிமிஷம் எங்க இருக்கேன்னே தெரியல
தலை அப்டியே கிர்ருண்ணுச்சு
வெரி டெலிகேட் பொசிஷன்…
பொளந்து கட்டிட்டாண்டா பொளந்து….
ஆன வரைக்கும் அள்ளிட்டு ஆளவுடுறா சாமி னு கிளம்பிற வேண்டியதுதான்….
பத்தொம்பது வரைக்கும்
தாங்குமானு தெரியலியே….
நாக்கு தள்ளிப் போச்சு
நாக்பூருக்கு
போன போடு….
இந்த நகைச்சுவை இல்லாத பகிரி குழுவே இல்லை எனலாம்.