களத்தூர் கமலை கொண்டு சேர்த்தவர் மறைந்தார் – கமல் இரங்கல்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய எம்.எஸ்.ராஜேஸ்வரி குழந்தைக் குரல் பாடகி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.

அவர் மறைவுக்கு நடிகர் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”களத்தூர் கமலை மக்களுக்குக்கொண்டு சேர்த்தது அம்மாவும் நீயே என்ற பாடலும்தான். அதைப்பாடிய அம்மையார் எம்.எஸ்.ராஜேஸ்வரி நம்மை விட்டு அகன்றார். அவர் ரசிகர்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்”

என்று கமல் தெரிவித்துள்ளார்.

Leave a Response