காவிரி மேலாண்மை வாரியம் தடைபட்டது இப்படித்தான்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 2013-ல் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வருவதற்கு முன்பாக – காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன் படி, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயலாக்கும் வகையில் உடனடியாக ‘காவிரி மேலாண்மை வாரியம்’ அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், “கர்நாடக மாநில தேர்தல் நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கலாமா?” என்று கேட்டு 23.3.2013-ல் பிரதமர் அலுவலகம், மத்திய நீர்வளத்துறையிடம் கருத்துக்கேட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கருத்துக்கேட்டு 16.4.2013-ல் மத்திய நீர்வளத்துறை கடிதம் எழுதியது.

இதற்கு 29.4.2013-ல் பதில் அளித்த தேர்தல் ஆணையம், “கர்நாடக மாநில தேர்தல் முடியும் வரை, அதாவது 5.5.2013 வரை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டாம்” என்று உத்தரவிட்டது.

அன்று கைவிடப்பட்ட “காவிரி மேலாண்மை வாரியம்” இன்றுவரை அமைக்கப்படவே இல்லை.

இப்போதும் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வருகிறது. இப்போதும் இந்திய உச்சநீதிமன்றம் 30.3.2018 தேதிக்கு முன்பாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும், எக்காரணத்தை முன்னிட்டும் விதிவிலக்கு இல்லை என்றும் உத்தரவிட்டுள்ளது!

அன்று காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங் துரோகம் செய்தார். இன்று பாஜக பிரதமர் மோடி என்ன செய்யப்போகிறார்?

அன்று நிகழ்ந்த வரலாற்றுப் பிழை, இன்றும் நிகழ்வதை தமிழகம் வேடிக்கை பார்க்குமா?

– அருள்ரத்தினம்

Leave a Response