ஜி.வி.பிரகாஷ் படத்தில் ஒரு புதுமை..!


‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக், தற்போது மீண்டும் ஜி.வி.பிரகாஷூடன் இணைந்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை ஒரு திரைப்படம் 2டி அல்லது 3டி தொழில்நுட்பத்தில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல்முறையாக ஒரு திரைப்படம் முதல் பாதி 2டி தொழில்நுட்பத்திலும், இரண்டாம் பாதில் 3டி தொழில்நுட்பத்திலும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் கதைப்படி இரண்டாம் பாதியில் 3டி தொழில்நுட்பம் தேவைப்படுவதால் முதல் பாதி 2டியிலும், இரண்டாம் பாதி 3டியிலும் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் முதன்முதலில் புகுத்தப்பட்ட இந்த தொழில் நுட்பம் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறது என்பதை படம் வெளியானவுடன் பார்க்கலாம்.

Leave a Response