அருவிக்கு குவியும் பாராட்டுக்கள்..!


தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்குப் பிறகு அனைத்து தரப்பினர்களையும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு படம் வெளியாகியுள்ளதென்றால் அது ‘அருவி’ படம்தான். இந்தப் படம் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதுவரை இந்த படத்திற்கு யாரும் நெகட்டிவ் விமர்சனம் கொடுக்கவில்லை

நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும், ஜாம்பவான்களும் அருவி திரைப்படத்தை பாராட்டி வந்தனர். இப்போது தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநரான டைரக்டர் ஷங்கர் ‘அருவி’ திரைப்படத்தை பற்றியும், இயக்குநர் அருண் பிரபு மற்றும் கதாநாயகி அதிதிபாலன் பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். லேட்டஸ்டாக உதயநிதியும் அருவிக்கான தனது பாராட்டை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

Leave a Response