போலீஸ் மீதான எண்ணத்தை மாற்றவரும் ‘தீரன் ; அதிகாரம் ஒன்று’..!


‘சதுரங்க வேட்டை’ வெற்றிப் படத்தை இயக்கியவர் வினோத். அடுத்ததாக இவர் நடிகர் கார்த்தியை வைத்து ‘தீரம் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இயக்குனர் வினோத், ‘‘காவல்துறை மீதான மக்களின் நெகடிவ் எண்ணங்களை ‘தீரன்’ படம் மாற்றும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் ஒருசிலரும் இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடவேண்டிய விஷயம். 1995லிருந்து 2005வரை நடைபெற்ற சில குற்றச் சம்பவங்களின் பின்னணியை வைத்து இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளோம். இப்படத்திற்காக 90களில் இருப்பதுபோன்ற படப்பிடிப்புத்தளங்களை தேடிக் கண்டுபிடிப்பது பெரிய சவாலான வேலையாக இருந்தது!’’ என்றார்

Leave a Response