சீமானின் கொள்கைகளைப் பேசுகிறதா மெர்சல்?- ஓர் அலசல்


மருத்துவம் என்ற தலைப்பிற்கு பதிலாக”மெர்சல்”என்ற தலைப்பை தம்பி அட்லி வைத்திருக்கிறார்.நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு பக்கம் 70ல் “நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்”. என்று தொடங்கி “மருத்துவம் அடிப்படை உரிமை,வழங்குவது அரசின் கடமை”என்று எங்களது மருத்துவ கொள்கையை வெளியிட்டு இருந்தோம்,கதைக்கான கருவை அதில் இருப்பது போலவே இருக்கிறது.

அரசு மருத்துவனைகள் தரம் உயர்த்தப்படும் என்ற தலைப்பில் “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,இந்திய ஆட்சிப்பணி,இந்திய காவற்பணியாளர்கள்,(ஐ.ஏ.எஸ்)அரசுமருத்துவமனைகளில்தான்
மருத்துவம் செய்துகொள்ளவேண்டும் என்று சட்டம் இயற்றப்படும்.என்று எழுதியிருதோம் இதை தான் விஜய் பேசுகிறார்.
“எல்லோரும் தாய்மொழிகளிள் பேசுகிறார்கள்!நாங்கள் மொழிகளின் தாய் மொழியில் பேசுகிறோம்”!
நாங்கள் தெருதெருவாகபேசும் வசனங்களைத்தான் படத்தின் பெரும்பான்மையான இடத்தில் பயன்படுத்தி இருக்கிறார் அட்லி. வசனம் சீமான்& நாம்தமிழர் கட்சியினர் என்று பெயர் போட்டிருக்கலாம்!.
நாம் தமிழர் கட்சி வெளியிடும் துண்டறிக்கைகள்,சுவரொட்டிகள் அனைத்திலும் அண்ணன் சீமான் உயர்த்திய கையைதான் குறியீடாக பயன்படுத்தி வருகிறோம்! அதையே விஜய்யும் செய்கிறார்.இன்று உலகம் முழுக்க இருக்கிற தமிழ் இளைஞர்கள் சீமானின் பேச்சால் கவரப்பட்டு எதற்க்கெல்லாம் கைத்தட்டுகிறார்களோ அதையே பயன்படுத்தி இருக்கிறார் அட்லி.நாங்கள் 2009ல் இருந்து தமிழ் நாட்டை தமிழனே ஆளவேண்டும் என்று சொல்லி வருகிறோம்.அதையே ஆளப்போறான் தமிழன் என்று பாட்டுப்போட்டிருக்கிறார்.
தமிழ்தேசிய கருத்தை தமிழ்இனத்தில் பிறந்த தமிழகத்தின் உச்சநட்சத்திரம் விஜய்யை கொண்டு பேசவைத்திருப்பதில் மகிழ்ச்சியே!
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் சீமானையும் சீமானின் தம்பிகளையும் தவிர்த்து விட்டு தமிழ் தேசியத்தை எவராலும் அடையமுடியாது.
இப்போது மட்டுமல்ல சீமான் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே 2006 சட்டசபை தேர்தல் அன்று”சன் தொலைக்காட்சி யில் ஒளிப்பரப்பான வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியில் “விஜய்”super starஆனது குறித்து உங்கள் கருத்து என்ற கேள்விக்கு, அண்ணன் சீமான்,எங்களினத்தில் பிறக்காத எம்.ஜி.ஆர்,ரஜினிகாந்தை எம் இளைஞர்கள் கொண்டாடினார்கள்.இப்பதான் என் இனத்தில் பிறந்த தமிழை தாய் மொழியாக கொண்ட ஒரு தமிழன் உட்சநட்சத்திரமாக வரான் அவனை கொண்டாட வேண்டியது எங்களின் கடமைன்னு பேசினார்.இந்த பேட்டியை பார்த்த விஜய்யின் அம்மா கண்ணீருடன் சீமானுக்கு நன்றி கூறினார்.
“கத்தி “படத்தை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய போலி தமிழ் தேசியம் பேசி கட்டப்பஞ்சாயத்து செய்யும் கட்சிகளெல்லாம் எதிர்த்த போது அப்படத்தின் வெளியீட்டிற்கு உறுதுணையாக இருந்தது சீமானும் அவனது தம்பிகளும்தான். அப்படமும் சீமானின் கருத்தை பேசிய படம் என்பதாலும் நடித்த,இயக்கிய,தயாரித்த அனைவரும் தமிழர்கள் என்பதாலும்.இது விஜய்கும் அவரது ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரியும்.சீமான் போட்ட விதை தமிழ்தேசியத்தை மீட்டெடுக்கும் விதமாக வளர்ந்திருக்கிறது!.சீமான் தரையில் பேசியதையெல்லாம் திரையில் பேசிய பச்சை தமிழன்”விஜய்க்கும்”பேச வைத்த பச்சை தமிழன்”அட்லி”க்கும்,நன்றி!எப்போதும் “விஜய்யும் விஜய் ரசிகர்களும் தமிழ்தேசியத்திற்கு உறுதுணையாக இருங்கள்!
நாங்கள் உயிராக இருப்போம்!..

Leave a Response