எடப்பாடி பழனிச்சாமி காக்கி டிரவுசர் போடுவதுதான் பாக்கி – சுபவீ விமர்சனம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோரைக் கைது செய்தார்.அதன்பின், சங்கராச்சாரிகளிடம் இருந்து ஜெயலலிதா விலகியே இருந்தார். அதிமுகவினரும் விலகி இருந்தனர்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகும் அதிமுகவினர் யாரும் சங்கராச்சாரியாரை அதிகாரப்பூர்வமாக சந்திக்கவில்லை.

இந்நிலையில், மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம் விழாவில் சங்கராச்சாரியாருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

காவிரி புஷ்கரம் விழா மலரை சங்கராச்சாரியார் வெளியிட, முதல்வர் பெற்றுகொள்ளும் நிகழ்வு திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது.

செப்டம்பர் 20 ஆம் தேதி, முதல்வர் பழனிசாமி காவிரியில் நீராடி முடித்ததும், மலர் வெளியீட்டு விழாவுக்கான மேடைக்கு காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அழைத்து வந்தார். சங்கராச்சாரி விழா மலரை வெளியிட, அதை முதல்வர் பழனிசாமி பெற்றுக்கொண்டார். பின்னர், சங்கராச்சாரியாரிடம் முதல்வர், அமைச்சர்கள் ஆசி பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வு அதிமுகவினரிடம் பெரும் கொந்தளிப்பையும் பொதுமக்களிடம் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலர் சுபவீ, ஜெ சிறையில் அடைத்த சங்கராச்சாரியிடம் ஆசியும் வாங்கிவிட்ட எடப்பாடி, இனி “காக்கி டவுசர்” போட்டு, ஷாகாவுக்குச் செல்வதுதான் பாக்கி என்று இதுபற்றி விமர்சனம் செய்துள்ளார்.

Leave a Response