இந்த நேரத்தில் சசிகலா சிறையில் இதைச் செய்தார் என்று வீடியோ வெளியிடுவது ஏன் தெரியுமா?

ஆகஸ்ட் 19-2017 – சொத்து குவிப்பில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் வரும் 22ம் தேதி விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் அமித்தவராய், பாப்டே ஆகியோர் இந்த வழக்கை விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த சீராய்வு மனு வரும் 22ம் தேதி இந்த டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வருகிறது.

ஆகஸ்ட் 21-2017 – அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையின் பிரதான வாயிலில் கையில் பைகளுடன் நுழையும் வீடியோ பதிவை கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸிடம், ஐபிஎஸ் அதிகாரி ரூபா அளித்துள்ளார்.

சசிகலா வழக்கின் சீராய்வுமனு விசாரணைக்கு வருகிறது என்றவுடன் அவர் சிறையிலிருந்து வெளியில் சென்று வந்தார் என்கிற வீடியோ வெளிவருகிறது. அதிகாரத்தில் உள்ளவர்களால் இது திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்று வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரே நேரத்தில் கர்நாடக காங்கிரஸ் ஆட்சிக்கும் அதிமுகவில் சசிகலாவின் இருப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதே இதன்நோக்கம் என்பதும் வெளிப்படை.

இது சமூகவலைதளங்களில் பரவலாக எதிரொலிக்கிறது. அதில்,

ஒவ்வொரு முறை சீராய்வு மனு விசாரணைக்கு வரும் சமயத்தில் சசிகலா சிறையில் இதைச் செய்தார் அதைச் செய்தார் என்று டுபாக்கூர் வீடியோக்களை வெளியிடுவது என்ன மாதிரி டிசைன்?

பரப்பன அக்ராஹாரா சிறை மெயின் கேட்டிலிருந்து பெண் கைதிகள் இருக்கும் வளாகம் கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது . அந்த வளாகத்தில் கைதிகளை சந்திக்க வருபவர்கள் தனியே அமர்த்தப்பட்டு . பின்னர் அவர்கள் சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் . அவ்வாறு சந்திக்க கைதி வரும் தருவாயில் வீடியோ எடுத்துட்டு சிறையிலிருந்து வெளியே சென்று வருகிறார்னு அடிச்சு விடும் எச்சைகளுக்கு வெளியே சென்று வந்ததற்கான முழு ஆதாரமிருந்தால் பேசவும்.

என்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

Leave a Response