கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் சங்கத்துக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையேயான ஊதிய விஷயத்தில் முரண்பாடு ஏற்பட்டு, அதன் காரணமாக இரண்டுநாட்கள் வேலை நிறுத்ததிலும் ஈடுபட்டது பெப்சி.. இந்த பிரச்சனை முதலில் ஆரம்பித்தது தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துவரும் பில்லா பாண்டி என்கிற படத்தில் தான்..
மதுரையில் நடைபெருவரும் அந்த படத்தின் படப்பிடிப்பில் டெக்னீசியன்கள் சிலர் பயணப்படியை இருமடங்காக கொடுக்குமாறு கலாட்டா பண்ணியதால் படப்பிடிப்பே நின்றது. அதன்பின்னர் சென்னை கிளம்பி வந்த ஆர்.கே.சுரேஷ் மூன்று நாட்களாக மதுரைப்பக்கம் போகாமல் சென்னையிலேயே தங்கிவிட்டார்..
ஆனாலும் அந்த மூன்று நாட்களிலும் தனது படப்பிடிப்பு நிற்பதற்கு காரணமான, போராட்டம் நடத்திய பெப்சி தொழிலாளர்களுக்கும் சேர்த்து உணவு வழங்க ஏற்பாடு செய்துவிட்டுத்தான் வந்தாராம் ஆர்.கே.சுரேஷ்