பூஜையுடன் துவங்கியது விஜய்சேதுபதி – த்ரிஷா ஜோடி சேரும் ’96’..!


கடந்த இரண்டு வருடங்களாகத்தான் முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்துள்ளார் விஜய்சேதுபதி.. இது அவரது அதிர்ஷ்டம் என்று சொல்வதை விட, நல்ல திறமையான, எளிமையான நடிகரான விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிப்பது சம்பந்தப்பட்ட முன்னணி நடிகைகள் செய்த அதிர்ஷ்டம் என்று சொன்னால் சரியாக இருக்கும்..

அந்தவகையில் நயன்தாரா, தமன்னா ஆகியோருடன் இணைந்து நடித்து வெற்றிப்படங்களை கொடுத்த விஜய்சேதுபதி தற்போது த்ரிஷாவுடன் இணைந்து ‘96’ என்கிற படத்தில் நடிக்கிறார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.. இது தொண்ணூறுகளின் காலகட்டத்தில் நடைபெறும் கதையாம்.

இந்தப்படத்திற்கான துவக்க விழா பூஜை நேற்று நடைபெற்றது.

Leave a Response