
வறட்சிக்காக இன்சூரன்ஸ் கம்பெனி கொடுக்கும் இழப்பீட்டுப் பணத்தைத் தட்டிப்பறிக்கிறது
மத்திய கூட்டுறவு வங்கி!
இந்த ஆண்டு வறட்சி தமிழகம் முழுவதையும் பாதித்துள்ளது என தமிழக அரசு அறிவித்து வறட்சி நிவாரணமும் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது.
கீழ்பவானி பாசனத்திட்டக் கால்வாயில்
தண்ணீர் திறக்கப்படவில்லை.மற்ற திட்டக்கால்வாய்களில் ஒரு சில நாட்களே தண்ணீர் விடப்பட்டது.
விவசாயிகள் நெல் பயிருக்கான இன்சூரன்ஸ் பிரியம் ஒரு ஏக்கருக்கு ரூ390/
விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கட்டினர்.
தற்போது ஈரோடு மாவட்டத்திற்கு நெல்
பயிர் இன்சூரன்ஸ இழப்பீடு ஏக்கருக்கு
ரூ 6500/ வீதம் 4.42 கோடி தொகை மத்திய
கூட்டுறவு வங்கி மூலம் கிராமக் விவசாயக்
கூட்டுறவு சங்கங்களுக்கு வந்துள்ளது.
இந்தப் பணத்தை அனுப்பும்போதே
ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி
ஒரு சுற்றறிக்கையையும் அனுப்பியுள்ளது.
அதில் விவசாயிகளின் கடன்தொகைக்கு
இந்தப்பணத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள்
என ஆணையிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல்பாயச்சுவது போலுள்ளது.
விவசாயிகளின் தவணை தவறிய கடனாக இருந்தால் கூட வறட்சிக் காலத்தில்
பிடிக்கக் கூடாது என்பது அரசு விதி.
ஆனால் கந்து வட்டிக்காரனைப் போல
நகையை ஈடுகட்டி வாங்கிய பயிர்க்கடனுக்கும் பிடிக்கச் சொல்லுகிறது
மத்திய கூட்டுறவு வங்கி.
பயிர்க்கடன் வாங்கியது ஒரு பயிருக்காக
இருக்கும்போது நெல் நடவு செய்யாமல் ஏற்பட்ட இழப்பை சரிகட்ட வழங்கும் காப்பீட்டுத் தொகையை தட்டிப் பறிப்பது
மிகப் பெரிய அநீதியாகும்.
மேலும் நடப்பிலுள்ள கடன் நிலுவைக்கு
விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விவசாயிகளுக்கு வரும் இழப்பீட்டுத் தொகையை பிடித்தம் செய்கின்றனர்.
இது சட்டப்படி குற்றமாகும்.விரைவில்
உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் வழக்குத் தொடுக்க
உள்ளோம்.
தொகையைப் பிடிக்கும் விவசாய கூட்டுறவு சங்கங்களை முற்றுகையிட்டு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்.
அனைத்து விவசாய சங்கப் பொறுப்பாளர்களே ,அவரவர் அமைப்பின் மூலம் இந்த அறிக்கையை திரும்பப் பெற
நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.
தற்சார்பு விவசாயிகள் சங்கம்.


