தனுஷுடன் இணைந்து முக்கியமான வேடத்தில் நடிக்கும் சுனைனா..!


காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. அதன்பிறகு ‘மாசிலாமணி உள்பட சில படங்களில் நடித்தாலும் அவரோட மார்க்கெட் என்னவோ சூடுபிடிக்கலை. ஆனா வம்சம், நீர்ப்பறவை ஆகிய படங்களுக்கு பின்னர் சுனைனாவோட நடிப்பு ரொம்பவே பேசப்பட்டது.

இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே படங்களில் நடித்து வருகிறார் சுனைனா.. இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் சுனைனாவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டனவாம்.

இந்தப்படத்தில் ஏற்கனவே தனுஷின் ஜோடியாக மேகா ஆகாஷ் என்பவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response