விக்ரம்-வேதா படப்பிடிப்பை முடித்தார் விஜய்சேதுபதி..!


‘ஓரம்போ’ படம் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமான இரட்டை இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி தற்போது மாதவன், விஜய்சேதுபதியை வைத்து ‘விக்ரம்-வேதா’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்கள்.. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்படத்தின் படப்பிடிப்பில் விஜய்சேதுபதி நடிக்கும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன..

இந்தப்படத்தில் கதாநாயகிகளாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடிக்க கதிர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.. வடசென்னை பின்புலத்தில் க்ரைம் த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. ஏற்கனவே கே.வி.ஆனந்தின் டைரக்சனில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘கவண்’ படம் மார்ச் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Leave a Response