‘மணல்கயிறு-2’ சான்றிதழுக்காக ‘கபாலி’ சர்ச்சையை கிளப்பிய எஸ்.வி.சேகர்..!


எஸ்.வி.சேகர், அஸ்வின் சேகர், விசு, பூர்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மணல் கயிறு-2’. தரண் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. இப்படத்துக்கு தணிக்கையில் முதலில் ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்ததாக தெரிகிறது. எஸ்.வி.சேகரும் ஒரு தணிக்கை அதிகாரியாக இருந்தாலும் கூட, அப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகத் தான் சென்றாராம்..

படம் பார்த்துவிட்டு முடித்துவிட்டு எஸ்.வி.சேகரை அழைத்த தணிக்கை அதிகாரி மதியழகன். “நாங்கள் யு/ஏ கொடுத்திருக்கிறோம்” என்றாராம்.. ஆனால் இது ‘யு’ சான்றிதழுக்கான படம். நீங்கள் எந்த அடிப்படையில் ‘யு/ஏ’ சொல்கிறீர்களோ, அதற்கு உண்டான அனைத்துக் கேள்விகளுக்கும் நான் பதில் சொல்கிறேன். நியாயம் கிடைக்காவிட்டால், தேவைப்பட்டால் உயர்நீதிமன்றம் செல்வேன். ‘கபாலி’ படத்துக்கு எதன் அடிப்படையில் ‘யு’ சான்றிதழ் கொடுத்தீர்கள் என தெரிந்துக் கொள்வேன். அதற்குப் பிறகு என்னுடைய படத்தை நீதிபதியே பார்க்கட்டும் எனச் சொல்வேன். பார்த்தப் பிறகு அவர்கள் கொடுக்கும் சான்றிதழை ஒப்புக் கொள்வேன்” என்று பதில் கூறினாராம்..

‘யு/ஏ’ சான்றிதழுக்கான ஒவ்வொரு விஷயமாக தணிக்கை அதிகாரி சொல்ல,. அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் எஸ்.வி.சேகர் சட்டப்பூர்வமாக பதில் சொன்னாராம். இறுதியாக ‘மணல் கயிறு-2’ படத்துக்கு தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response