திருவண்ணாமலையில் தனியார் மருத்துவமனையின் அரக்கத்தனம் – ஒரு செய்தியாளரின் நேரடி அனுபவம்

அரசு மருத்துவமனைகள் என்றால் அங்கு சரியான சிகிச்சை அளிக்கமாட்டார்கள், தனியார் மருத்துவமனையில் பணம் வாங்கினாலும் நல்ல சிகிச்சை கொடுப்பார்கள் நன்றாகக் கவனிப்பார்கள் என்கிற எண்ணம் பொதுவானது. அதைப் பொய்யாக்கும் வண்ணம் திருவண்ணாமலையில் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. தீக்கதிர் நாளேட்டில் பணியாற்றும் ஜாபர்ஹுசேன் தன்னுடைய முகநூலில் எழுதிய பதிவில் அந்நிகழ்வு விவரிக்கப்பட்டிருக்கிறது. அதில்….

நேற்று…நடந்த கசப்பான அனுபவம்..
மருத்துவசேவை….
உயிர் காக்கவா.. பறிக்கவா..

திருவண்ணாமலை தீக்கதிர் நிருபர் குகன் உடல்நலக்குறைவால் கேஎம்சி அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள நியூ ஹோப் என்ற தனியார் மருத்துவமனையில் சிறுநீர் தொற்று நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டார். ஐசியுவில் ஒருநாள் சிகிச்சை செய்து விட்டு ரூ25.500 கட்டவேண்டும் என்றும் நாளொன்றுக்கு குறைந்தது ரூ25.500 கட்டவேண்டும் இருப்பினும் அவர் அபாயக்கட்டத்தில் இருப்பதாகவும் கூறினர்.

உடனே எதிரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு மாற்றிக்கொள்கிறோம். எங்களிடம் பணம் குறைவாக இருக்கிறது என்றோம். அதற்கு எங்களால் எதுவும் செய்யமுடியாது மருத்துவமனை ப்ரோட்டோ கால் படி பணத்தை உடனே கட்டவும். ஒருரூபாய் கூட குறைக்கமுடியாது என்றனர். கையில் இருக்கும் பணத்தையும் தீக்கதிர் நிர்வாகத்திடமிருந்து ஒருதொகையும் பெற்று பணம் கட்டச்சென்றால். நோயாளிக்கு மருந்து செலுத்தியுள்ளோம் கூடுதலாக 7000 தொகையை கட்டவேண்டும் என்று மற்றொரு குண்டை போட்டனர் .

ஒருவழியாக பேசி டிஸ்சார்ஜ் வாங்கினோம். உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் குகனுக்கு வென்டிலேட்டர் தரமுடியாது என்று கூறியதோடு. ஆம்புலன் வசதி செய்து தரமுடியாது நீங்களே கொண்டுபோங்கள் என்று மனிதாபிமானம் இன்றி கூறிவிட்டனர்.

மருத்துவமனையில் வாசற்படியில் ஒரு ஆம்புலன்ஸ் நிற்கிறதே அதையாவது தாருங்கள் என்று கெஞ்சினோம். அந்த ஆம்புலன்ஸ் சும்மா டம்மிக்கு அது எப்சி ஆகாதவண்டி.. உங்களுக்கு ஆம்புலன்ஸ் வேண்டுமென்றால் அதில் உள்ள போன் நம்பரில் தொடர்பு கொண்டு பணம் கொடுத்து வண்டியை எடுத்துவாருங்கள் என்று மருத்துவமனை நிர்வாகிகள் கூறிவிட்டனர்.

இரவு நேரத்தில் ஜஸ்ட் டைலுக்கு போன் செய்தால் அவர்கள் கொடுத்த ஆம்புலன்ஸ் சர்வீஸிடம் வென்டிலேட்டர் வசதிகொண்ட ஆம்புலன்ஸ் இல்லை என்றனர். சில நிமிடங்கள் கழித்து அவர்களே போன்செய்து 90 அடி தூரமே தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ரூ 3000 கட்டணம் கொடுக்கவேண்டும் என்றனர் மனிதாபிமானம் இன்றி….

மருத்துவமனை செவிலியர்களிம் கெஞ்சிகேட்டோம் அப்போது மேனுவல் ஆக்சிஜன் பலூன் உதவியோடு கேஎம்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றினோம். அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிறிது நேரத்தில் தேனீக்களை போன்று பணியாற்றி மரணத்தின் விளிம்பில் இருந்த குகனை ஓரளவு மீட்டு தற்போது கேஎம்சி ஐசியூவில் சிகிச்சை அளித்து வருகின்றார். 759ஆக இருந்த சர்க்கரை அளவு தற்போது 400ஆக குறைந்துள்ளது.

நண்பர்களே…
அரசு மருத்துவமனை ஊழியர்களையும் மருத்துவர்களையும் கடிந்து கொள்ளாதீர்கள் . அவர்கள் நிலையிலிருந்து பிரச்சனையை பாருங்கள்….லால்சலாம்.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response