
யார் பரப்பி விடுகிறார்கள் என்பதே தெரியாது.. ஆனால் நொடிக்கு நூறு கி.மீ வேகத்தில் பரவக்கூடியது வதந்தி.. வதந்திகளில் மோசமான வதந்தி, ஒருவர் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்துவிட்டார் என தகவல் பரப்புவதுதான்.. பல நட்சத்திரங்கள் இந்த சங்கடத்தை அவ்வப்போது சந்தித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன் கவுண்டமணியும் அந்த வதந்திக்கு இரையானார்..
கவுண்டமணி பற்றிய இப்படிப்பட்ட வதந்தி வெளியாவது இது முதல் தடவை அல்ல.. வதந்தியாளர்கள் மூன்றாவது முறையாக அவரை சாகடித்துள்ளார்கள்.. இதுபற்றி அறிந்த கவுண்டமணி, தான் நலமாக இருப்பதாக கூறியுள்ளதோடு, “என்னை சாகடிச்ச அந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதர் யாருப்பா.. இதனால உங்களுக்கு என்ன சந்தோஷம்ப்பா” என தனது பாணியில் காமெடியாக கேட்டுள்ளார்.


