சங்கடத்தில் பாபி சிம்ஹா..!


காதல் திருமணம் முடித்த நட்சத்திரங்களில் ஒரு சில தம்பதிகள் கருத்தொருமித்து வாழமுடியாமல் விவாகரத்தை நாடுகிறார்கள்.. சமீபகாலமாக இந்தப்போக்கு அதிகமாகி வருகிறது.. அமலாபால்-ஏ.எல் விஜய் ஜோடி பிரிந்து, தற்போது விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.. ஏற்கனவே விவாகரத்துக்கு விண்ணப்பித்து காத்திருந்த மலையாள இயக்குனர் பிரியதர்ஷன்-லிசி தம்பதியினருக்கு சில தினங்களுக்கு முன்புதான் அதிகாரப்பூர்வமான விவாகரத்து கிடைத்தது.

அவ்வளவு ஏன்..? பார்த்து பார்த்து திருமணம் செய்துவைத்த சூப்பர்ஸ்டாரின் இளைய மகள் சௌந்தர்யாவே தனது கணவருடன் பிரிந்து வாழ்வதாகவும் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கப்போவதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.. இந்நிலையில் சமீபத்தில் காதல் திருமணம் செய்த பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனன் நட்சத்திர தம்பதியினர் வாழ்விலும் கருத்து வேறுபாடு என்றும் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை அளித்தன.

கேட்கும் நமக்கே அதிர்ச்சி என்றால் அப்படி எதுவும் நடந்திராத நிலையில் சம்பந்தப்பட்ட பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனனுக்கு எப்படி இருந்திருக்கும்.. அதனால் தான் இந்த வதந்தியை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்பதால் உடனடியாக, “எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.. எங்கள் வாழ்க்கை வண்டி நன்றாகத்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.. நாங்கள் பிரிந்து வாழவில்லை.. நாங்கள் வாங்கும் பீட்சாவை மட்டும் தான் பிரித்து தின்கிறோம்..” என பதில் அளித்துள்ளார் பாபி சிம்ஹா.

Leave a Response